தேசிய காங்கிரஸ் மூலம் அரசியலில் அறியப்பட்டவர்கள் அதாஉல்லாவிற்கு விளக்கம் சொல்ல தகுதி அற்றவர்கள் பேய் வளர்த்த பிசாசு ஓன்று கோவில் மீது ஏறி நின்று சாமியை குற்றம் சொல்லியதாம் என்பதுபோல் காலத்துக்குக் காலம் சுகபோகங்களுக்காக கொப்புத் தாவும் ஸ்ரீ ல மு காங்கிரசில் புதிதாக சேர்ந்து கொண்ட ஒருத்தர் அதாஉல்லாவை கொச்சைப்படுத்த முற்படுவது கண்டிக்கத் தக்கது என அக்கரைப்பற்று முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.
இவருடைய கருத்தான செத்த பாம்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒட்சிசன் வழங்காது எனக் கூறியிருப்பது மேல் கூறியதற்கு ஒப்பானது ஆகும் அதிலும் தான் என்ன கூறுகிறோம் என்பது கூட தெரியாத அளவிற்கு புத்தி பேதலித்துப் போய் இருக்கின்றது அதாவது செத்த ஒன்றுக்கு ஒட்சிசன் வழங்க முடியுமா?
இன்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பதவி என்பது ஹக்கீமுக்கு அதாஉல்லாவின் சாதுரியத்தால் கிடைத்த ஒரு வரம் என்பது ஹகீமால்தான் மறுக்க முடியுமா? மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு நாடே அழுது கொண்டிருந்த பொது மரணத்தை மகிழ்வாக கருதி பட்டாசு கொளுத்தியவர்களுக்கு அக்கட்சியினைப் புகழ்வதற்கு இறைவன் கொடுத்த தண்டனையே இதுவென்று எண்ணத் தோன்றுகிறது.
அதாஉல்லாவின் வீட்டு நுழைவாயிலில் தனது நன்றி உணர்வை அதன் பண்புகளால் வெளிக்காட்ட தவம் கிடக்கும் நாய்க்கு இருக்கும் பண்புகள் கூட சில மனிதர்களுக்கு இல்லாமல் போனது வேதனைக்குரியதாகும் ஊரைத் தின்று ஏப்பம் விட்டு உருக்குக் கம்பியையும் விளிங்கியவர்கள் மார்பில் பாயும் கிடாவாக மாறியிருப்பது நம்முட ஊர்பாசையில் சொல்லுவதன்றால் என்ன புதினம்டப்பா இது என்று எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.
|