மஹிந்த தரப்பின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டது ; விசாரணைகள் தொடரும் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனுவை நிராகரிப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

mahinda

பாரிய மோசடி, ஊழல், பொது வளங்கள் மற்றும் சலுகைகளை அதிகார துஷ்பிரயோகம் செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வரவழைக்கப்பட்டிருந்தார். 

இதன்போது பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து, மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த ஆட்சேபனைகளினால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

presidential commission
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இரண்டாவது நாளகவும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான பாரிய மோசடிகள் தொடர்பிலான ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்டந்து முன்னெடுக்கப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் ஆட்சேபனையை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.