அமெரிக்காவின் கடற்கரை மாநிலமான ஓரிகானில் உள்ள லிங்கன் நகரில் உள்ள சப்வே வகை உணவகத்தில் சான்வெஜ்ஜை ஆர்டர் செய்து விட்டு ஜோன்ஸ் என்ற வாடிக்கையாளர் பசியுடன் காத்திருந்தார்.
ஆர்டர் வந்ததும் அலறிய அவரைப் பார்த்து சப்ளையரே அரண்டு விட்டார். காரணம் அந்த சான் வெஜ்ஜூக்குள் செத்த எலி ஒன்று இருந்தது. ஜோன்சின் நண்பர் இந்த அரிய காட்சியை உடனடியாக தன் செல்போனில் படம்பிடித்து ட்விட்டரில் அப்லோடு செய்தார்.
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த, அந்த உணவகத்தின் மேலாளர் சான்வெஜ்ஜுக்கு உண்டான பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டு, தக்க விசாரனை நடத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
கடந்த 6-ம் தேதி நடந்த இந்த கலவரமான சம்பவம் மக்கள் மத்தியில் காட்டித்தீ போல் பரவியதால், நம்மூரில் பெப்பர் இல்லாமல் ஒரு ஆம்லெட் என்று சொல்வதைப் போல, செத்த எலி இல்லாம ஒரு சான் வெஜ் என்று சான்வெஜ் வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்தை கலாய்த்து வருகின்றனர்.