37 வருடங்களின் பின்னர் நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதி முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது!

Unknown

 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று   நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சரத் வீரசேகரவும்  வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.  இன்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது.  இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு இன்று மாலை 7 மணிக்கு  நடத்தப்பட்டது.  அதன்பின்னர் பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் சமூகமளிக்கவில்லை.