தமிழ்ச்சிறைவாசிகளுக்கு நல்லாட்சி கைகொடுக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸத்தீன் !

 சட்டத்திற்கு தேவைப்படும் தகுந்த ஆதாரங்கள் இவ்வளவு நீண்டகாலமாக கிடைக்காத போதும், இனிமேலாயினும் அவற்றைத் தேடிப்பெறலாம் என்பதற்கான எதுவித ஏதுவும், நம்பிக்கையும் வெளிப்படுத்தப்படாத நிலையிலும், சட்டத்தீர்ப்புக் கிடைக்காமல் ஆயுட்கால சிறைக்கைதிகளைப் போல தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சிறைவாசிகளை சட்டத்திற்குத் தேவைப்படும் ஆதாரங்கள் கிடைக்கும்போது திரும்ப அழைத்து எடுத்துக் கொள்ளக்கூடிய விதத்திலாவது நீதித் துறை பொருத்த மெனக் கருதும் பிணை மூலம் அவர்களை விடுவிப்பதறகு; எல்லாருக்கும் பொதுவான இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த தமிழ்ச்சிறைவாசிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டும் என்று முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கச் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான சடட்த்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார் .

cegu

ஆதாரம் இல்லாது போனால், பலத்த சந்தேகத்தையும் அனுமானத்தின் அடிப்படையிலான தாகவே சட்டத்தில் கருது முடியும். எனவே, அந்த சந்தேகத்தின் பேரில் குற்றத்தை நிரூபிக்கவோ, தண்டனை வழங்கவோ சட்டத்தில் இடமில்லை.

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது” எனற நீதி மொழி சொல்லிச் சொல்லி திருப்திப்படுத்திக் கொள்வதெற்கென்று சொல்லப்பட்ட விசயமல்ல.

கருணை, மனிதாபிமானம் என்ற நியாய அடிப்படைகளை தற்சமயத்திற்கு ஒதுக்கி வைத்து விட்டு, சட்டத்தேவைப்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலும், ஆதாரம் கிடைக்கும் வரை எவரையும் – அவர் சாகும் வரையிலென்றாலும் சரியே – சந்தேகசத்தின் பேரில் ஆயுள் குற்ற வாளியாக அடைத்து வைத்திருக்க சட்டமோ அல்லது சட்டத்தின் பாதுகாவலர்களோ இடமளிப்ப தாகவிருநத்தால் அந்த சட்டம் அவசர அவசரமாக மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும் .

இந்த நாட்டு சட்ட முறைமை அமைப்புகளின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுத்து வருகிறது.

இநத் நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு , தகுந்த ஆதரங்கள் இல்லாததால் வருடக் கணக்காக அடைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைவாசிகளை, தகுந்த ஆதாரம் கிடைக்கப் பெறும் வரையிலாவது, பொருத்தமான பிணையிலேனும் விடுவித்து பாதிக்கப்பட்டவர்களின் பெண்கள், பிள்ளைகளினது நெஞ்சுப் பாரத்தைக் குறைக்க நீதி தேவதையின் பேரால் இந்த எல்லோருக்கும் பொதுவான நல்லாட்சி அரசாங்கம் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.