அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை (02) இலங்கைக்கு வருகை தரவுள்ளமையை அமெரிக்க இராஜங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.
10 ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் முதலாவது இலங்கை விஜயம் இதுவென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.