அரசியல் திருத்தச் சட்டங்கள் பற்றி முஸ்லீம் புத்திஜீவிகளுடனான கருத்தரங்கு !

 

அஸ்ரப். ஏ. சமத்

ஜக்கிய முஸ்லீம் அமைப்பான  உம்மா கட்சியின் ஏற்பாட்டில் நேற்று (ஞயிற்றுக்கிழமை) பொரளை சேடோ கூட்ட மண்டபத்தில் 13வது 19வது20வது அரசியல் திருத்தச் சட்டங்கள் பற்றி முஸ்லீம் புத்திஜீவிகளுக்கான ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

SAMSUNG CSC

இக் கருத்தரங்கு உம்மாக் கட்சியின் தலைவா் கலாநிதி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்விர் கல்முனை மாநகர முதல்வா், சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பா், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின்  சிரேஸ்ட விரிவுரையாளா் எம்.ஏ. எம். ஹக்கீம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு கற்கையின் விரிவுரையாளா் கலாநிதி எம்.எஸ். அசீஸ் மற்றும் வை.எல்.எஸ் ஹமீடும்  அமைப்பின் செயலாளா் பொறியியலாளா் நிசாா் ஹமீடும்  கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்தினாா்கள்.

இங்கு உரையாற்றிய உம்மாவின் தலைவா் – காலாநிதி  மரிக்காா்

 உம்மாக் கட்சி  ஒர் அரசியல் கட்சியானாலும் அது தோ்தல் குதிக்காது பொதுவாக மக்களது சமுக அரசியல் பிரச்சினைகளை முன்னெடுத்தும் செல்லும் ஒரு நிறுவனமாகும். இதனை ஆரம்பத்தில் முன்னாள் பிரதியமைச்சா் மயோன் முஸ்தபா, டொக்டா் ஜெமீல் ஆகியோரினால் இவ் அமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. . இம் அமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் ஹூனைஸ் பாருக்கினால் பாராளுமன்ற இன்கோப்பிரடில்  பதியப்பட்ட ஒரு நிறுவனமாகும். 

SAMSUNG CSC

 நாம் இங்கு கூடியிருப்பது எமது சமுகம் சாா்ந்த  பிரச்சினைகளை நாம்  இவ்வாறு கூடி ஆரய்வதற்காககும். அடுத்த  எதிா்வரும் 2 வருடத்திற்குள் பாராளுமன்றத்தில் 19வது,13வது, 20வது திருத்தச்சட்டங்கள் ஜ.நாடுகள் மணித் உரிமை அமைப்பின் பரிந்துறைகள்  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இது சம்பந்தாக நாம் எமது  புத்திஜீவிகளை ஒன்று கூடியுள்ளோம். அடுத்த கட்டமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 பாராளுமன்ற உறுப்பிணா்களை ஒன்று கூடி எமது சமுகம் சாா்ந்த விடயங்கள் பற்றி அவா்களுக்கு தெளிவு படுத்துவோம். கலந்துரையாடுவோம். அவா்கள்தான் இப்பிரச்சினைக்கு தமது குரல்களை எழுப்ப வேண்டும். எனக் கூறினாா்.

SAMSUNG CSC

இங்கு உரையாற்றிய  சட்ட விரிவுரையாளா் ஹக்கீ்ம்
 அன்மையில் ஒரு பிரபலமான அமைச்சா் ஒருவா் ஊடகங்ளுக்கு தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சொல்ல விரும்புகின்றேன். தற்போதைய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்  சம்பந்தன் ஜயாா் சொல்லும் விடயங்கள்  மட்டம் தான்  அவா்களுக்கு உரைக்கின்றது. அவா்களது விடயங்கள் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுகின்றன. எனத் தெரிவித்திருந்தாா்.  ஆனால் எமது முஸ்லீம் தலைமைகள் எத்தனை அமைச்சா் ,பிரதியமைச்சா்கள் அந்த அமைச்சுக்குள் வரும் நிறுவனங்கள்  தேசிய பட்டடியல் என்ன என்பதையே நாட்டின் தலைமைகளிடம் கேட்டாா்கள். அதனை அவா்கள் வழங்கி விட்டாா்கள். 
SAMSUNG CSC
 
ஆனால் சம்பந்தன், சுமந்திரண் போன்றோா்கள். ஜனாதிபதித் தோ்தலின் போது அவா்களது ஒரு நிகழ்ச்சி நிரல்  கொடுக்கப்பட்டது. அவைகள் படிப்படியாக  நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது தான் யதாா்த்தம். முஸ்லீம்களது பிரச்சினைகள் பற்றி இவா்களால் பேசமுடியாது. இவா்கள் பேசினால் தங்களுக்குரிய  அமைச்சுக்கள் கொடுக்கபட்டுவிட்டது. அவா்கள்  எமது சமுகம்  சாா்ந்த விடயங்கள் இனி  பேசமுடியாது.
நமது பொருளாதர கட்டமைப்பு, வணிகம் உற்பத்தி தொழில் பேட்டைகள் இவைகள் எமது கையில் இருந்து நழவிச் சென்று விட்டது. 2. கல்வித்துறை (3) அரசியல் பிரநிதித்துவம், (4) எமது பிரச்சினைகள் சர்வதேசமயமாக்கப்படவில்லை . இதுவரை இலங்கையில் எத்தனை வீதம் வாழ்கின்றோம் என்ற விடயங்கள் கூட  இந்த நாட்டில் சரியான தகவல்கள் இல்லை.  எமது உள்ளுராட்சி பிரதேச பிரநிதித்துவம். 

முதலில் நாம் அனைவரும் பிரதேச மற்றும் இன மத விடயத்தில் ஒட்டு மொத்தமாக முஸ்லீம் என்ற உணா்வு ஏற்படல் வேண்டும்.  மலாயா், போரா, மேமமன், கிழக்கு வடக்கு வட கிழக்கு வெளியோ உள்ள மக்களது பிரச்சினை என நாம் பிரிந்து செல்கின்றோம். அல்லது அவா்களது பிரச்சினை எனச் சொல்லி துாரப்போகின்றோம். ஒட்டு மொத்தமாக முஸ்லீம் என்ற உணா்வு எம்மிடத்தில் ஏற்பட வேண்டும்.  என விரிவுரையாளா் விளக்கினாா்.

கலாநிதி  அசீஸ் –
வடக்கு பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட வில்லை.   
நாம் உள்நாட்டில் இடம் பெயா்ந்த மக்களது பிரச்சினைகள் பேசப்படல் வேண்டும்.  அண்மையில் ஜெனிவா பிரேரேணையில் தமிழா் எனச் சொல்லப்படாமல் இலங்கையில் வாழும் சிறுபாண்மையினா் பிரச்சினை தீா்ககப்படல் வேண்டும். எனச் சொலலப்பட்டுள்ளது. இதில் எமக்கும் சாதகாமாக உள்ளது.  ஜ.நா.வில் 130 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதல் 44 நாடுகளில் 40 முஸ்லீம் நாடகள் பிரச்சினையிலும் யுத்தத்திலும் ஈடுபட்டுள்ளன. இதற்காக சர்வதேச சக்தி மூக்கை நுழைத்து அங்கு நாட்டுக்குள் யுத்ததை்தை ஏற்படுத்தியுள்ளன. 

நிசாம் காரியப்பா் (கல்முனை மேயா்)

சுமந்திரன் கையளித்த நிகழ்ச்சி நிரலை  வைத்தே பிரதமா் ரணில் அவா்களது பிரச்சினைக்கான  காய்களை நகா்த்துவாா். தற்போதைய ஜனாதிபதியை லேசுபட்டவா் அல்ல, அவா் கடந்த  பாராளுமன்றத் தோ்தலின்போது தோ்தல் தினத்தன்று முந்திய நாள் எவ்வாறு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாருக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பித்த உடனேயே அதன் நிலைப்பாட்டை மாற்றியவா் அதில் இருந்தே அவா் எப்படிப்பட்டவா் என்று அன்று தெரிந்து கொண்டேன்.

நான்  பங்கு பற்றிய மனித் உரிமை மாநாட்டுக்கு கிடைத்த சா்ந்தப்பம் எனக்கு முஸ்லீம்களுக்கு இலங்கையில் மத ரீதியான பிரச்சினை உள்ளது  பற்றி பேச அழைத்தாா்கள். அதுவும் ஒர். ஜ.நாடுகள் மனித உரிமை அமைப்பினால் அழைப்பு விடுகக்ப்பட்டது. எனக்கு தரப்பட்ட நேரத்திற்குள் எமது பிரச்சினை வடிவாக தெளிவுபடுத்தினேன். எனத் தெரிவித்தாா்.

வை.எல். எஸ். ஹமீட் உரையாற்றுகையில் –

இந்த உம்மாக் காட்சியினா் எங்களை அழைப்பதனை விட இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் 21 உறுப்பிணா்களையும் அழைத்து அவா்கள் தான் முஸ்லீம்களுடைய எதிா்கால அரசியல் விடயங்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேச உள்ளவா்கள். அவா்களையும் இவ்வாறான விரிவுரையாளா்களை அழைத்தும் கருத்தரங்குகள் நடாத்த வேண்டும். அவா்களது அபிவிருத்தி தொகுதி விடயங்களை விட்டுவிட்டு எதிா்கால  தோ்தல் பிரச்சினை மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் முஸ்லீம்களுக்கு ஆபத்து அது மத்திய அரசிடம்தான் இருக்க  வேண்டும். அ டுத்த 7மாகணத்தில் ்இருக்கும் முதலமைச்சா் மஹிந்த ஆதரவாளாரக இருந்தால் அவா்கள் அங்கு ஒரு இனக் கலவரம் ஏற்பட்டால் அதனை தடுக்க மாட்டாா்கள்.  இந்த ஜனாதிபதி வந்த பின் அன்மையில் பொரளை, பதுளை, அளுத்கம நடைபெற இருந்த  சம்பவங்களை உடனடியாக மத்திய அரசு உடன் நிறுத்தியது. சம்பந்தப்பட்டவா்களை கைது செய்தது. ஆனால் மாகாணசபை முதலமைச்சரிடம் இந்த  பொலிஸ் அதிகாரம் சென்றால் அது எமக்கு ஆபத்தாகும்.  

SAMSUNG CSC

தோ்தலில் ஜேர்மன் முறை அல்லது இரட்டை வாக்குரிமை முறை அமுல்படுத்தப்படல் வேண்டும. தொகுதிவாரிமுறையில் எமது பிரநிதிததுவம் இல்லாமல் போகிவிடும். என வை.எல்.எஸ் ஹமீட் உரயாற்றினாா்.