கண் பார்வை குறைவுள்ள சுமார் 1000 தமிழ்-முஸ்லிம் வறிய மக்களுக்கு கண் பரிசோதனையுடன்,இலவச மூக்குக்கண்ணாடி வழங்கி வைப்பு!

 

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் 11 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ,தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி), அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸார் உட்பட பொது மக்கள், தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது கண் பரிசோதகர்களான எஸ்.ஏ.எம்.சமீம்,ரீ.எம்.நிலாம்,ஏ.தர்சினி ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட கண் பார்வை குறைவுள்ள சுமார் 1000 ஆயிரம் தமிழ்-முஸ்லிம் ஆண்,பெண் வறிய பொது மக்களுக்கு அதிதிகளினால் இலவச மூக்குக்கண்ணாடி  வழங்கப்பட்டதாக தாருல்
அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
DSC_0134_Fotor_Collage_Fotor