சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றி..!

எஸ்.அஷ்ரப்கான்

இருபதுக்கு இருபது சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.

age steel_Fotor

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் மற்றும் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நேற்று (07) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 14.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற  சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழக அணி சார்பாக முஹம்மட் அப்றாத்-35 ஓட்டங்களையும், அணித்தலைவர் முஹம்மட் றிழ்வான் 24 ஓட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர்.