சிரியாவில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் உள் நாட்டு யுத்தத்தின் பின்னனி என்ன ?

 உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அக்கிரமங்களையும் அட்டூளியங்களையும் முஸ்லிம்கள்  ஆராய்ந்து தெளிவு பெறுவதென்பது கட்டாய கடமைகளில் ஒன்றாகவே இருக்கின்றது ஏனெனில் எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் ஆகவே உலகத்தில் எந்த  ஒரு கடைக் கோடி மூலையில் ஒரு முஸ்லிமுக்கு அநியாயம் நடந்தாலும் அது அனைத்துலக   முஸ்லிம்களையும்  பாதிக்க வேண்டும் அப்போதுதான் நாம் அனைவரும்  ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கு முடியும் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

image.adapt.990.high.3 SYRIAs WAR 960x600.1426356436026

உலகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பல் வேறு நாடுகளில் யுத்தம் நடந்து இருக்கின்றது அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக யுத்தம் புரிந்தது  அதே அமெரிக்கா ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக  பொய் சொல்லி இலட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று  யுத்தம் புரிந்து இருக்கின்றது அதே  போன்று இஸ்ரேலிய  யூத நசாராக்கள்  பலஸ்தீனுக்கெதிராக  யுத்தம் புரிந்து இலட்ச்சக்கணக்கான மக்களையும்  கொன்று குவித்து   தனக்கு அடைக்கலம் தந்த   பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு உபத்திரவம் செய்துள்ளது என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்  இதற்கு பின்னனி யார் என்றும் எமக்கு வெளிப்படையாகவெ தெறியும் இது மேற்கத்தயே யூத நசாரக்களின் சதித் திட்டம் என்று ஆகவே இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு மித்த கருத்தாக  யூத நசாராக்களுக்கு எதிராகவே கிளர்ந்தெளுந்தோம்.

2010 கடைசிப் பகுதியில்தான் முதல் முதலாக உள் நாட்டு போர்  அரபுலக வசந்தம் என்ற பேரில் தூனிசியாவிலிருந்து ஆரம்பமாகின்றது அந்த புரட்சி படு பயங்கரமாக வெடித்ததன் காரணமாக அன்றைய தூனிசியாவின் ஆட்சியாளராக இருந்த சைனுல் ஆப்தீன் பின்  அலி என்பவன் ஆட்சியிலிருந்து தூக்கிறெியப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை  முதல் முதலாக அங்கு  கொண்டு வரப்படுகிறது அந்த புரட்சிக்கு பின்னர் 2011ம் ஆண்டு  அந்த நோய் லிபியாவுக்கு தொற்றி அங்கும் புரட்சி ஒன்று ஏற்படுகிறது ஆனால் அந்த யுத்தம் ஆரம்பமாவதற்கு பின்னனி காரணம்  யாருக்கும் சரியாக அறியாமலே இருந்தது  ஆனால்  அன்றைய காலத்தில் அங்கிருந்த ஆட்சியாளன் முஹம்மது அல் ஹத்தாபியும் அவனது குடும்பமும்  அவனது கடந்த கால ஆட்சி முறையிலயே அதிகமான பொது  மக்களை கொன்று குவித்ததன் விளைவாக  பெரும் பன்மை  மக்களும் அவனுக் கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் ஆகையால் இலகுவாக  அவனது குடும்பத்தையும் அவனையும் கொன்றொலித்து ஒரு அமைதியான ஆட்சி யொன்றை அங்கு  தேர்வு செய்து கொண்டார்கள் .

syria-map

அதன் பிற் பாடு அந்த நோய் எகிப்துக்கும் தொற்றுகிறது ஆனால் எகிப்தின் அன்றைய ஆட்சியாளன் ஹுஸ்னி முபாரக்  என்பவன்  பிர் அவ்ன் போன்று ஒரு  கொடுங் கோள் ஆட்சியாளனாகவே காணப்பட்டான் அவனுக்  கொதிராக அதிகமான பெரும் பான்மை சமூகத்தினர் எகிப்தில் கிளர்ந்தெளுந்தனர் ஆகவே அவனும் மிக நீண்ட போராட்டத்துக்கு பிற்பாடு மேற் கத்தய நாட்டின் தலையீட்டினாலும்   அவனும் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டான் அதன் பிற்பாடு முதல் முதலாக ஜனநாயக ரீதியில் எகிப்தில் முர்சி அவர்கள்  தேர்வு செய்யப்பட்டார்கள் ஆனால்  குறுகிய காலத்திலயே  அவரையும் திட்டமிட்டு ஆட்சியிலிருந்து தூக்கியறிந்ததை நாம் அறிவோம் அதன் பின்னனி என்ன அங்கு தற்போது எந்த முறையான ஆட்சி நடக்கிறது என்பது மக்களுக்கு தெறியாத புதிராகவே இன்று வரை இருக்கின்றது.

அதன் பிற்பாடுதான்  அந்த நோய் சிரியாவுக்குள்   தொற்றுகிறது முதல் முதலாக சிரியாவில் மக்கள் கிளர்ச்சி பண்ணுவதற்கு முக்கிய காரணமே  அங்கு பசருல் அசாத்  செய்த அட்டூளியம் நிறைந்த ஆட்சி முறையே பசருல் அசாத்துடைய தந்தை  ஹாபிதுல் அசாத் சுமார் முப்பது வருட காலம் கொடுங் கோல் ஆட்சி செய்துள்ளான் அதன் பிற்பாடு அதே போன்று  பசருல் அசத் பத்து வருட காலம் ஆட்சி செய்துள்ளான் முதல் முறையாக 2000ம் ஆண்டு ஜூலை பத்தாம் திகதிதான் இந்த பசருல் அசாத் ஆட்சிக்கு வருகின்றான்.

இவனுடைய ஆட்சி ஒரு சர்வதிகார ஆட்சியாகவே  பத்து வருட காலமும் இருந்துருக்கின்றது  இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெறிதாக பாதிக்கப்பட்டனர் சட்டத்தை சுயநலத்துக்காக உபயோகித்தான் தன்னை எதிர்ப்பவரை கொலை செய்யும் படி முழு அதிகாரத்தையும் இரணுவத்திடம் வழங்கியிருந்தான்  இதனால் சிறு சிறு குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் கடும் கொடுமைகளுக்கு உற்படுத்தப்பட்டனர் அமெரிக்காவின் அபூ குரை சிறைச்சாலையில் கொடுக்கும் தண்டனையை விட மிகக் கொடூரமான மனிதாபி மானம் உள்ள மனிதர்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத  தண்டனைகளை அங்குள்ள நிரபராதி முஸ்லிம்களுக்கு  கொடுத்தான்   பேச்சுத் சுதந்திரம் பறிக்கப்பட்டது தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டது  ஆகையால் அதிகமான மக்கள் வீதிகளுக்கு வந்து போராடத் தொடங்கினார்கள் ஆனால் இராணுவம் சும்மா விட வில்லை கிளர்ந்தெளுந்த மக்களையெல்லாம் கொன்றொழித்துக் கொண்டிருந்தது

இவ்வாறான கால கட்டத்தில் 2011 பெப்ரவரி மாத ஒரு  காலப் பகுதியில்  பத்து  பச்சிளம்  பாடசாலை மாணவிகளை இராணுவம் கைது செய்து சிறையிலடைத்தது ஏனெனில் அந்த பச்சிளம் மாணவிகள் பாடசலை சுவரொன்றில் பஸருல் அசத் என்ற கொடுங் கோள் ஆட்சியாளனிடமிருந்து எங்களுக்கு ஆட்சி மாற்றம் கிடைக்க வேண்டு எங்களுக்கு சுதந்திரமான ஆட்சி  வேண்டும் என்ற எழுதியதே அவர்கள் சிரியா இராணுவத்தால் கைது செய்யப் பட்டதற்கான பின்னனி காரணமாக இருந்தது.

அந்த பாடசாலை மாணவிகள்
கைது செய்யப் பட்டதன் விளைவு என்னவாகியதென்றால் மக்கள் சிரியா முழுவதும்  ஆங்காங்கே கிளர்ந்தெளுந்தார்கள் பிரச்சினைகள் பெறிதாகியது  இராணுவ அடக்கு முறையை கொண்டு அடக்க முயற்சி செய்கிறார்கள முடியாத தருணத்தில் வான் வலித் தாக்குதல் நடத்தினார்கள்  அதிகமான மக்களை சிறை பிடித்தார்கள்  இவ்வாறு நாளுக்கு  நாள் இவனுடை அராஜக ஆட்சி மேலோங்கியது இதனால் சவூதி அரேபியா  குவைத்  துபாய் கத்தார் பஹ்ரைன் போன்ற அரபுலக நாடுகள் சிரியாவுடைய  தனது உறவை முறித்துக் கொண்டு தனது தூதுவர்களயைும்  அங்கிருந்து தமது நாட்டுக்கு திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள்  ஆனால் பசருல் அசத் அவனுடைய கொடுங் கொள் ஆட்சியை கை விட வில்லை மெம் மேலும் அவனுடைய அட்டகாசம்  அதிகரித்தது.

இதனால் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் சிரியாவின்  அதிபர்  பசருல் அசத் அந்த பதவிக்கு தகுதி  அற்றவர் அவர் மக்களுடன் கார சாரமாக ஆட்சி செய்கிறார் என்று ஒரு சமர்ப்பணத்தை முன் வைத்தனர் அது மட்டு மன்றி அவர் உடனடியாக பதிவி விலக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்  ஆனால் பசருல் அசாத் அதுவெல்லாம் பொருட் படுத்த வில்லை எந்த வொரு பெருளாதார தடை வந்தாலும் எந்த வொரு நாடு எதிர்த்தாலும் அதனை மேற்கொள்வேன் என்ற ஆணவத்தோடு அவனது அடக்கு முறையை பின் தொடர்ந்தான்,

அடக்கு முறைக்கு எதிரான  ஆட்சி மாற்றத்துக்காக உருவாகிய இந்த  யுத்தம் கடைசியில் கொள்கை பிரச்சினையாக உருவெடுத்தது சீயா சுன்னி  என்ற கோட்பாட்டில் பின்பு  நாளுக்கு நாள் இவனுடைய இராணுவ அட்டகாசம் சுன்னா முஸ்லிம்களுக்கு எதிராக  மேலோங்கியது காலப்போக்கில் என்ன நடந்தது என்றால் லெபனானில் உள்ள ஷீஆ ஆயுத படைப் பிரிவான ஹிஸ்புல்லா ஆயுத படையும் பலஸ்தீனில் யஹூதி நசராக்களுக்காக எதிராக உருவாக்கப்பட்ட  ஒரு ஷீஆ ஆயுத  பிரிவும்  மற்றும் ஈராக்கில் உள்ள இன்னொரு ஷீஆ  அயுதப் படையும்  பசருல் அசாத் உடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை  கொன்றொழிக்க திட்டமீட்டினார்கள்.

காலப் போக்கில் மிக மோசமான நிலை உருவெடுத்தது இரசாயன ஆயுதங்களை பயன் படுத்த தொடங்கினார்கள்  இதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் முஸ்லிம்களின் பள்ளி வாயல்கள் பாடசாலைகள் என்று எந்த வீத பாகுபாடுமின்றி தான் ஒரு மனித உருவில் நடமாடும் மிருகம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்டினான் இந்த பசருல் அசத் என்ற கொடுங் கோல்  மன்னன் பின்பு  சில செய்திகள் வெளி வந்தது இந்த உள் நாட்டு யுத்தத்தில் யூத நசாராக்களும் இந்த பசருல் அசாத்துடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருப்பதாக இதிலிருந்து எமக்கு வெளிப் படையக விளங்குவது இந்த ஷீஆக்களுக்கும் யூத நசாராக்களுக்கும் ஒருதொடர்பு இருப்பதாக ஏதோ அல்லாஹ் போதுமானவன்.

ஷீஆக்களின்  ஆதிக்கம் பெரும் பான்மையாக கொண்ட  ஈரான் போன்ற நாடுகளும் கடந்த காலங்களில் பசருல் அசத்துடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை கொள்வதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை எம்மால் அறிய முடிந்தது ஏனெனில் ஈரானே மறைமுகமாக கூறியுள்ளது ஈராக்கி்ல் உள்ள ஷீஆ ஆயுத பிரிவினர் சிரியா இராணுவத்துடன் சேர்ந்து செயற் பட்டால் நாள் சம்பளமாக 1300 டொலர் அவர்களுக்கு  வளங்கப் படும் என்று இதிலிருந்து ஈரான் போன்ற அணு ஆயுத சக்தி மிக்க  நாடுகளும் முஸ்லிம்களை சிரியாவிலிருந்து  கொன்றொழிப்பதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை மாத்திரம்  வெளிப் படையாக எம்மால் அறிய முடிகிறது

எது எதுவாகவிருந்தாலும்  இன்று வரை இந்தப்  போராட்டம் முடிவடையாத நிலையிலயே இருக்கின்றது  நாளுக்கு நாள் சிரியா முஸ்லிம்கள் தனது நாட்டை விட்டு  அகதிகளாக ஐரோப்பிய நாடுகளிலும் துருக்கி சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் தஞ்சம் புகுவதை மட்டுமே எம்மால் காண முடிகின்றது  அதிகமாக சிரியா அகதிகளுக்கு மத்திய கிழக்கு  முஸ்லிம் நாடுகளும் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் போன்ற மேற்கத்தய நாடுகளுமே உதவி புரிந்து வருவதையும் எம்மால் அறிய முடிகின்றது இதிலிருந்து கூட இது ஷீஆ சுன்னி பிரச்சினையாகவே எம்மால் கண் காணி்க்க முடிகின்றது

ஏன் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களை இவ்வாறு துன்புறுத்துகின்றார்கள் என்று பார்ப்போமேயானால் ஷீஆக்களின் பார்வையில் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களின் பேரன் ஹூசைன் (ரலி) அவர்களை கர்பலாவில் வைத்து கொலை செய்தவர்கள் முஸ்லிம்கள் அந்த முஸ்லிம்களை கொலை செய்வதை வணக்கமாக நினைத்து செய்து கொண்டிருக்கின்றார்கள் இந்த ஷீஆக்கள்  என்பதே உண்மையாகும்,

இந்த  சிரியா உள் நாட்டு போர் ஆரம்பத்தின் பின்னனி காரணம் அடக்கு முறையான ஆட்சியும் மக்களின்  பொருளாதர வசதியின்மையுமே என்று மறைமுகமாக நாம் அறிந்து  இருந்தாலும் எதிர் காலத்தில் பிரச்சினை மும்முறமாவதற்கு முக்கிய காரணம்  ஊடகங்களின் காய் நகர்த்தலே என்றும் எம்மால் அறிய முடிகிறது ஏனெனில்  இணையத்தளங்களின் மூலம் சிரியா சிறைச்சாலையில் எந்த வீத குற்றமும் செய்யாத அப்பாவி முஸ்லிம்கள் மீது சிரியா இராணும் மேற் கொண்ட கொடுமைகள் வெளியாகியதே அதிகமான மக்கள் நாடுகள் கிளர்ந்தெளுவதற்கு முக்கிய காரணியாகவும் இருந்து இருக்கின்றது கடைசியில் இந்த பிரச்சினை யெல்லாம் திட்ட மிட்டு சாதித்து காட்டி குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்கள் மேற்கத்தயே யூத யஹூதிகளே என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்  இந்த  யுத்தமானது முதல்  முதலில்  ஆட்சி மாற்றத்துக் கெதிராக  மக்கள் கிளர்ச்சி செய்ததன் விளைவாக வந்த  யுத்தம் என்றாலும் அது காலப் போக்கில்  சத்தியத்துக்கும் அசத்தியத்துமெதிரான  யுத்தமாகவே உருவெடுத்தது என்பதை  மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

எவ்வாறாக இருந்தாலும்,

அல் குர் ஆனின் கூற்றுக்  கேட்ப  ஒரு நாள்  நிச்சயம் சத்தியம் வென்றே ஆகும் அசத்தியம் தோற்றே ஆகும்
அதையும்  வெகு விரைவில் எதிர் பார்க்கலாம் இன்ஷா  அல்லாஹ்

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை