ஓட்டமவடி அஹமட் இர்ஸாட்
வீடியோ, அலி- ஹாசிமியுடனான நேர்காணல்
கொழும்பில் ஈரான் நாட்டின் உதவியுடன் இயங்கிவருக்கின்ற பல்கலைகழகமான அல்–முஸ்தபா பல்கலைகழகத்தின் புதிய பணிப்பாளர் அலி ஹாஸிமியுடனான நேர்காணல்.
அஹமட் இர்ஸாட்:- புதிதாக அல்-முஸ்தபா பல்கலைகழகத்திற்கு பணிப்பாளராக கடமையினை பொறுப்பேற்றிருக்கும் உங்களைப்பற்றி சிறு அறிமுகத்தினை தர முடியுமா?
அலி ஹாஸிமி:- எனது கலைமாணி பட்டத்தினை பொருளியியல் துறையில் பூர்த்தி செய்துள்ளதோடு முதுமாணி பட்டத்தினை அரச முகாமைத்துவ கற்கையில் பூர்த்தி செய்துள்ளோன் அத்தோடு இஸ்லாமிய கற்கைகளில் இருபது வருட அனுபவத்தினை கொண்டுள்ளேன்.
அஹமட் இர்ஸாட்:- ஈரான் நாடானது வைத்தியத்துறை, தொழில் நுட்பவியல், பொறியியல் என உச்சகட்டத்தில் உலக நாடுகளுடன் போட்டிபோடுக்கின்ற நிலையில் ஏன் நீங்கள் இலங்கையில் மானிடவியல் கற்கையினை மையப்படுத்தி அல்-முஸ்தபா பல்கலைகழகத்தினை முன்கொண்டு செல்கின்றீர்கள்?
அலி ஹாஸிமி:- ஈரானில் இருக்கின்ற பல்கலைகழகங்களை பொறுத்தமட்டில் முஸ்தபா பல்கலைகழகத்தில் மானிடவியல் கற்கைகள்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுக்கின்றன. ஏனைய துறைகளான மருத்துவம், தொழில் நுட்பம், துறைகள் ஆரம்பிக்கப்படாமை கராணமாகவே நாங்கள் இலங்கையில் மானிடவியல் கற்கைக்கு முன்னுரிமை கொடுத்து இப் பல்கலைகழகத்தினை ஆரம்பித்துள்ளோம். அதே போன்று ஈரானில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களும் தங்களுடைய கிளைகளை ஏனைய நடுகளில் ஆரம்பித்து வருக்கின்றன. அந்த வகையில் எதிர்காலத்தில் மருத்துவம் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த கற்கைநெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
அஹமட் இர்ஸாட்:- இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இந்த பல்கலைகழ்கத்தினை நடாத்தி வருக்கின்ற நீங்கள் இலங்கையில் செயற்படுக்கின்ற அரச, தனியார் பல்கலைகழகங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது எவ்வாறான வேறுபாட்டினை காணக்கூடியதாக இருக்கின்றது.
அலி ஹாஸிமி:- ஏனைய பல்கலைகழகங்களைப் போன்று இங்கும் சட்டத்துறை மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் போதிக்கப்பட்டு வருக்கின்ற அதே நேரத்தில் சட்டத்துறையினை தெரிவு செய்கின்ற மாணவர்களுக்கு இஸ்லாமிய வழிமுறையில் தங்களுடைய உலக கல்வியினை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அத்தோடு எமது பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களாக கடமையாற்றுகின்றவர்கள் இந்த நாட்டில் தேசிய ரீதியில் முன்னணி வகிக்கின்ற அனுபவம் வாய்ந்த திறமையான விரிவுரையாளர்களாக காணப்படுவதினால் திறமையான கற்பித்தலினை எங்களால் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம். இங்கு மிகவும் கவனிக்கதக்க விடயமாக ஏனைய தனியார் பல்கலைகழகங்களோடு ஒப்பிடுக்கின்ற பொழுது எமது பல்கலைகழகத்தினால் அறவிடப்படுக்கின்ற கட்டணங்கள் மிகக்குறைவகவே இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இஸ்லாமிய ரீதியில் பார்க்கின்ற பொழுது ஆத்மீக கல்வியும் உலக கல்வியும் முக்கியமான விடயமாக இருக்கின்றது. அந்த வகையிலே உங்களுடைய பல்கலைகழகத்தில் இஸ்லமிய கல்வியும் உலக கல்வியும் எந்த அடிப்படையில் போதிக்கப்படுக்கின்றது?
அலி ஹாஸிமி:- மாணவர்கள் எமது பல்கலைகழகத்தில் சமயரீதியான கற்களை தொடர்கின்ற பொழுது நாங்கள் தனிப்பட்ட அல்லது முதன்மைப்படுத்தக் கூடிய சமய கற்கைகளை நாங்கள் தினிப்பதில்லை. அவர்களின் விருப்பங்களுக்கு அமைவாகவும் பொதுவான வகையிலுமே ஆத்மீக கல்வியினை வழங்கி வருக்கின்றோம். அத்தோடு பகுத்தறிவு சார்ந்த பக்குவமுடைய மாணவ சமூதயத்தினை உறுவாக்குவதினை கருத்தில் கொண்டே எமது கற்பித்தல் அமைந்திருக்கின்றது. இதனால் எமது பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறுக்கின்ற மாணவர்கள் சர்வதேச ரீதியில் சமயங்களுக்கு மத்தியில் அமர்வுகளை ஏற்படுத்தவும், கலந்துறையாடல்களை முன்னெடுத்துச் செல்லவும், நல்லுறவுடன் வாழ்வதற்கும் பழகிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இலங்கை வளர்ந்து வருக்கின்ற ஓர் நாடக இருக்கின்ற படியினால் இலங்கையில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் எவ்வறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என எதை காண்கின்றீர்கள்?
அலி ஹாஸிமி:- அன்மையில்தான் இப் பல்கலைகழகத்தின் பணிப்பாளராக நான் கடமையினை பொறுப்பேற்றுள்ளபடியினால் என்னால் இக்கேள்விக்கான பதிலினை தற்பொழுது கூறமுடியாமல் இருக்கின்றது. இருந்தும் எதிர்காலத்தில் இலங்கையில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வினை எவ்வாறு எடுக்க முடியுமோ அதற்காக நான் முயற்சிப்பேன் என கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- ஈரான் நாடானது இன்னும் பொருளாதாரத்தில் முற்றுமுழுதாக வளர்சியடையாத நாடாகவே இருக்கின்றது. அந்தவகையிலே ஈரான் நாடானது பல நாடுகளில் இவ்வாறான பல்கலைகழகங்களை ஏற்படுத்தி சமூகசிந்தனையின் அடிப்படையில் மாணவர்களுக்கு சாத்தியமான குறைந்தபட்ட செலவுடன் உயர்கல்வியினை வழங்கிவருக்கின்றமைக்கான முக்கிய காரணமாக எதனை உங்களுடைய நாடு நோக்கமாக கொண்டு செயற்படுக்கின்றது?
அலி ஹாஸிமி:- இந்த பல்கலைகழ்கத்தினை பொறுத்த மட்டில் ஈரானுக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த இலாபமும் கிடையாது. பொதுவாக எங்களுடைய நோக்கமானது சர்வதேச ரீதியிலும் ஈரானுடைய எல்லை நாடுகளுக்கிடையேயும் சமயம் மற்றும் சமூகங்களுக்கிடையில் சமாதனத்தினையும் நல்லுரவினையும் ஏற்படுத்துவதனூடாக ஏனைய நாடுகள் பொதுவான இலாபத்தினை அடையும் பொழுது அதில் ஈரான் நாட்டிற்கும் இலாபம் இருக்கின்றது. அத்தோடு முஸ்தபா பல்கலைகழகத்தினூடக இரண்டு நடுகளுக்கிடையே அறிவு, சமய, சமூகரீதியான கலாச்சார உறவுகளை பலப்படுத்துக்கின்ற அதேநேரத்தில் இவற்றினை அடிப்படையாக கொண்டு இரண்டு நாடுகளுக்கிடையே கருத்து பறிமாற்றங்கள் இடம்பெறுக்கின்ற பொழுது இரண்டு நாடுகளுக்கிடையிலான அறிவு, சமய, கலாச்சார ரீதியான நன்மைகளை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அஹமட் இர்ஸாட்:- தலைநகரமான கொழும்பில் கல்விகற்பதற்கான எல்லாவகையிலுமான வசதிகள் காணப்படுக்கின்ற நிலையில் இஸ்லாமிய சிந்தனையுடைய உங்களுடைய நாடானது ஏன் இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி முஸ்தபா பல்கலைகழ்கத்தினை நிறுவவில்லை?
அலி ஹாஸிமி:- பொதுவாக பல்கலைகழ்கத்தின் தரத்திற்கு அமைவாக அது கொண்டிருக்க வேண்டிய தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு நாட்டின் தலை நகரமே அதற்கு தகுதியான இடமாக காணப்படும். அந்த வகையிலேயே நாங்கள் கொழும்பினை மையப்படுத்தி எமது பல்கலைகழ்கத்தினை அமைத்துள்ளோம். ஆனால் இந்தநாட்டின் மக்களின் தேவையினை கருத்தில் கொண்டும், எங்களுடைய இயலுமையின் அடிப்படையிலும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி எமது கிளைகளை எதிர்காலத்தில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அஹமட் இர்ஸாட்:- இலங்கையில் பொதுவாக பல்கலைகழகங்களில் இருக்கின்ற குறைபாடுகள் உங்களுடைய பல்கலைகழகத்திலும் இருக்கின்றதா?
அலி ஹாஸிமி:- முஸ்தபா பல்கலைகழகத்தினை பொறுத்தமட்டில் குறைகள் என்று சொல்லகூடிய வகையில் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. முக்கியமாக நாங்கள் இந்த நாட்டின் அரச அதிகாரிகளிடம் வேண்டிக்கொள்வதானது ஏனைய துறைகளையும் எமது பல்கலைகழகத்தில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பினை எமக்கு வழங்க வேண்டும் என்பதாகும். அந்த வகையிலே நாங்கள் சகல துறைகளையும் கொண்ட ஒரு பல்கலைகழகமாகவே முஸ்தபா பல்கலைகழகத்தினை எதிர்காலத்தில் உறுவாக்க திட்டமிடப்பட்டுள்ளதனால் தற்பொழுது முன்னெடுத்துச் செல்கின்ற துறைகளில் எவ்வித குறைபாடுகளும் இருக்க வாய்ப்பில்லை.
அஹமட் இர்ஸாட்:- ஈரான் நாட்டினை பொறுத்தமட்டில் ஜப்பான், கொரியா நாடுகளைப் போன்று தங்களுடைய மொழிக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். அந்த வகையிலே முஸ்தபா பல்கலைகழகத்திலும் ஈரானிய மொழிக்கா முன்னுரிமை கொடுக்கப்படுக்கின்றது?
அலி ஹாஸிமி:- இலங்கையில் ஏனைய பல்கலைகழங்களில் கற்பிப்பதனை போன்று எங்களிடம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக கற்கைகளை ஆங்கில மொழியிலேயே முன்னெடுத்து வருக்கின்றோம். அதே போன்று மாணவர்களின் வேண்டுகோள்களுக்கும், விருப்பங்களுக்கும் அமைவாக பாரசீக மொழியிலும் கற்கைகள் ஆரம்பித்து முன்னெடுத்து வருவதுடன் தற்பொழுது ஈரானில் இருக்கின்ற முஸ்தபா திறந்த பல்கலைகழகத்தில் சர்வதேச வலைப்பின்னல் ஊடாகவும் நேரடியாக கற்கைள் இடம்பெற்றுவருவதினை பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- சாதாரனமாக உங்களுடைய பல்கலைகழகத்திலே சட்ட கல்வியினை பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு தொகையினை நீங்கள் அறவிடுகின்றீர்கள்?
அலி ஹாஸிமி:- தற்போதைய நிலைமையில் சட்ட கல்வியினை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு அவர்கள் சம்பூர்ணமாக தங்களுடைய கல்வியினை பூர்த்தி செய்து கொள்வதற்கு இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக அறவிடப்படுகின்றது.