ஜவ்பர்கான்
காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச மக்கள் இன்று காலை முதல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
யுத்த்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வெல்லாவெளி பிரதேச மக்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த 10 நாட்களுக்குள் மூவர் யாகைளின் தாக்குதலிகளினால் மரணமாகியுள்ளனர்.நேற்றும் ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன் பல நூறு வீடுகளை சேதமாக்கியுள்ளதுடன் வயல்நிலங்கள்இ தென்னை மற்றும் மரக்கறி தோட்டங்களையும் நாசமாக்கிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெல்லாவெளி பிரதேச செயலகத்தின்முன்னால் இவ்ஆர்பாட்டம் இடம்பெற்றது.
வீதியை மறித்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது நிலைமைகளை விளக்கி ஜனாதிபதிஇ பிரதமர்இ சுற்றாடல் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர்களும் அனுப்ப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அரசியில் பிரமுகர்களும் சமுகமளித்திருந்தனர்.