ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
உவைஸ் ஹாஜியுடனான நேர்கானல்:-VIDEO
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய மனைவி சம்பந்தமன பிரச்சனையான தேசியத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சகல மக்களாலும் பேசப்படும் பிரச்சனையாக தற்பொழுது பெறுக்கெடுத்து வருக்கின்றது. நீங்கள் அதனை தற்பொழுது எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
உவைஸ் ஹாஜி:- ஊடகங்களிலும், முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருக்கின்ற எனது மனைவி சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையனது மிகவும் கவலை அளிக்ககூடிய விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒரு கணவனாலேயோ அல்லது முஸ்லிமினாலேயோ பேசப்படுகின்ற விடயமாக கூட இதனை ஒரு போதும் பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம் சமய தலைவர்கள், பெரும்புள்ளிகள், ஆரசியல்வாதிகள், வியாபார முதலாலிமார்கள் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்ற பொழுது தங்களுடைய கெளரவம் போய்விடும் அல்லது தங்களுடைய தொழில், வியாபாரம், சமூக அந்தஸ்து சிதறடிக்கப்பட்டு விடும் என்பதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மூடிமறைப்பதினல் இவ்வாறான பிழைகளை பயமின்றி துணிச்சலோடு செய்பவர்கள் சமூகத்தலிருந்தும், நாட்டின் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். அதே போன்றுதான் அசாட்சாலியும் பல தடவைகள் இவ்வாறான தவறுகளை செய்தும் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததின் காரணமாக நான் எப்போதும் தனிக்காட்டு ராஜ என நினைத்து எனது மனைவியுடனும் விளையாடியுள்ளார். அதற்கு எனது மனையும் பழிக்காடாகியுள்ளர். இவ்வாறான நிலைமை மீண்டும் இந்த நட்டில் வாழுக்கின்ற எந்த மணிதனுக்கும் இடம்பெறக்கூடாது என்பதில் நான் முன்வைத்துள்ள காலை பின்வைக்கப்போவதில்லை.
அஹமட் இர்ஸாட்:- ஒரு பெண்ணானவள் இஸ்லாமிய வரம்புகளுக்குள் வாழ்ந்து விட்டு அன்னிய ஆடவனுடன் சேர்ந்து தப்பான விடயத்தில் ஈடுபடுவாள் என்றால் அதற்கான தீர்வினை இஸ்லாம் அழகான முறையில் கூறுக்கின்றது. அந்தவகையிலே நீங்கள் தப்பிழைத்த உங்கள் மனைவியை இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் தலாக் சொல்லி உங்களுடைய இறுதி வாழ்கையினை உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஏன் நிம்மதியாக தொடரக் கூடாது?
உவைஸ் ஹாஜி:-நான் வாழ்ந்த முப்பது வருட வாழ்க்கையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதனை கருத்தில் கொண்டு அதிலிருந்து மீள்வதற்காக இன்னொரு திருமணம் முடிப்பதோ அல்லது அதில் திருப்தி அடைந்து கொள்வதற்கோ என்னிடம் எந்த நோக்கங்களும் கிடையாது. இந்தவிடயம் சம்பந்தமக சகல மக்களுக்கும் ஒரு வேண்டுகோளினை விடுக்க விரும்புக்கின்றேன். 30 வருடங்கள் மிகவும் அன்புடனும், அன்னியொன்னியமாகவும் வாழ்க்கையினை கொண்டு சென்ற எங்களுக்கிடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இருந்ததில்லை அதற்கு எனது நன்கு பிள்ளைகளும் சாட்சியாக இருக்கின்றனர். எனது மனைவியின் குடும்பத்திலிருக்கின்ற சகோதர சகோதரிகள் ஒருத்தர் கூட எனது மனைவிற்காக இதுவரைக்கும் கருத்து தெரிவிக்கவில்லை. அசாட்சாலியும் குறுகிய ஒரு வருடத்திற்குள் இத் தொடர்பினை ஏற்படுத்தி முப்பது வருடங்கள் வாழ்ந்து நான்கு பிள்ளைகளுக்கு தாய்யக இருந்த எனது மனைவி சமூகம், குடும்பம், மார்க்கம், எல்லாவற்றையும் ஒரே அடியாக தூகியறிந்து விட்டு அசாட்சாலியுடன் ஓடிப்போனமையினை பார்க்கின்ற பொழுது எனது மனைவிக்கு என்ன நடந்திருக்கும் என்பதனை என்னல் ஊகித்துக்கொள்ள முடியதவாறு மனஉளைச்சலாகவே இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- மனிதர்கள் அனைவரும் தப்பிற்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் நீங்கள் ஏன் உங்களுடைய மனைவிக்கு மன்னிப்பு வழங்கி உங்களுடைய வாழ்கையினை புதிதாக அமைத்துக்கொள்ள நினைக்க கூடாது?
உவைஸ் ஹாஜி:- மன்னிப்பு என்பது ஒரு முஸ்லிமினால் இன்னொரு மனிதனுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய விடயமாகும். மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் பெரும்தன்மையாகவே இருக்கின்றது. முப்பது வருடங்கள் என்னுடன் வாழ்ந்து எனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்து எனக்கு நான்கு பிள்ளைகளை பெற்றுத்தந்த எனது மனைவி எனக்கு செய்த துரோகத்தினை மன்னித்து அவர் இவ்வுலகில் நிம்மதியாக வாழ்வதற்கு நான் ஒருபொழுதும் இடைஞ்சலாக இருக்கப் போவதில்லை. ஆனால் அவருடன் நான் மீண்டும் எனது இல்லர வாழ்க்கையினை தொடர்வதையோ அல்லது எனது வாழ்க்கையில் அவர் பங்குபோட்டுக்கொள்வதனையோ எனது பிள்ளைகள் ஒரு பொழுது ஏற்றுக்கொள்ளப் போவதில்லை அதனை செய்யபோவதுமில்லை. அத்தோடு இவ்வறாக எனது மனைவி தப்பிழைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அசாட்சாலியினை இந்த நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது முக்கிய வேண்டுகோளாக இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் மனையினை கொடுமைப்படுத்தியதாகவும் எதிர்தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுகின்றதே?
உவைஸ் ஹாஜி:- நீங்கள் அசாட்சலி கூறிய கருத்தினையே கூறுகின்றீர்கள். நாண் கண்டியில் பிறந்து வழ்ந்து கொழும்புக்கு வந்து அதுவும் நாட்டின் முன்னணி பாடசாலையான றோயல் கல்லூரியில் எனது நான்கு பிள்ளைகளையும் கற்பித்திருக்கின்றேன் என்றால் பிள்ளைகளின் கல்வியில் நான் எந்தளவு பங்கெடுத்திருப்பேன் என்பதனை நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என நினைக்கின்றேன். எனது சமூதாயம் கல்வி கற்ற சமூதாயமாக மாற வேண்டும் என்பதனை விருபுக்கின்றவன் என்ற அடிப்படையிலேயே எனது பிள்ளைகளும் சமூதயத்திற்கு கல்வியினை போதிக்கின்ற பிள்ளைகளாக உறுவாக வேண்டும் என நினைத்து நான்கு பிள்ளைகளையும் படிப்பித்திருக்கின்றேன். எனது மனைவியை நான் கொடுமைப்படுத்தியதாக அசாட்சாலி கூறும் கருத்தானது அவருடைய பிழையினை மறைத்துக்கொள்வதற்காகவே அன்றி அது எனது மனையின் உள்ளதிலிருந்து வெளிப்பட்ட கருத்தாக ஒருபொழுதும் இருக்க மாட்டாது என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை. மக்களை ஏமாற்றும் நாயகனான அசாட் இதைவிடவும் பல கட்டுக்கதைகளை தெரிவிப்பார் என்பதனை வருக்கின்ற நாட்களில் விளங்கிக்கொள்வீர்கள்.
அஹமட் இர்ஸாட்:- அசாட்சாலி எனப்படுபவர் பெண்கள் விடயத்திலே தப்பானவர் என்றும் நன்பனாக பழகி இறுதியில் துரோகம் இழைக்கும் பன்பினை கொண்டவர் என குற்றம் சுமர்த்தும் நீங்கள், ஏன் எல்லாம் தெரிந்திருந்தும் அசாட்சாலியினை குடும்ப நன்பராக வீட்டிற்குள் நுழையவைத்து இவ்வாறான பிரச்சனையினை உங்கள் தலையில் வைத்துக்கொண்டீர்கள். இது பொது மக்கள் மத்தியில் பரந்துபட்ட கேள்வியாகவும் இருக்கின்றது.
உவைஸ் ஹாஜி:- இவறுடைய இவ்வாறான பழக்கவளக்கங்களை நான் இந்த பிரச்சனைக்கு முகம் கொடுத்தற்கு பிற்பாடே அதிகமாக கேள்விபடக்கூடியதாக இருக்கின்றது. நானும் எனது வியாபாரமுமாக வாழ்ந்ததோடு அரசியலினை தூய்மையான முறையில் முன்னெடுத்து வந்த ஓர் சாதாரன மனிதனாகவே இருந்துள்ளேன். இன்னொருவரின் சொந்த வாழ்கை எவ்வாறு காணப்படுக்கின்றது என்பதனை அவருடைய வாழ்க்கைக்குள் மூக்கினை நுளைத்து அசைப்போட்டுக்கொள்ளும் மனிதனல்ல நான் ஒருபொழுதும் வாழ்ந்ததில்லை. நானும் அசாட்சாலியும் அரசியல் நன்பர்களாக மாறியதற்கு பிற்பாடு எனது மனைவியும் அசாட்சாலியினுடைய மனைவியும் சிறந்த நன்பிகளாக மாறிவிட்டார்கள். இதனை அசாட்சாலி தனக்கு சாதகமாக பயண்படுத்தியதோடு எனது மனைவியினை அவருடைய காதல் வலையில் விழவைப்பதற்கும் முக்கிய ஆயுதமாக பயண்படுத்திக்கொண்டார். அத்தோடு அசாட்சாலியினுடைய சொந்த விவகாரங்கள் மற்றும் அவருடைய கெட்டவிடயங்கள் சம்பந்தமக நான் துப்பறியப்போகவுவில்லை. அதற்கு எனக்கு நேரமும் கிடையாது. முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற அல்லாஹ்விற்கு பயந்த, சமூக சிந்தனைமிக்க ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாக அசாட்சாலியினை கருதியதால்தான் நான் அவரை ஒரு சிறந்த நன்பர் என்ற வட்டதிற்குள் உள்வாங்கி பழகிவந்தேன்.
அஹமட் இர்ஸாட்:- இப்பிரச்சனைக்கு இவ்வாறு பல காரணங்களை கூறிவருக்கின்ற உங்களுடைய பக்கம் நியாயங்கள் இருக்கின்ற என பார்த்தாலும் இதில் ஒரு அரசியல் பின்னணி இருக்கின்றதாகவும் அசாட்சாலி முக்கியமான தைரியமிக்க அரசியல் பேச்சாளராக நாட்டிலே செயற்பட்டு வருவதினால் அவருடைய அரசியல் எதிரிகள் உங்களை தூண்டிவிட்டு அசாட்சாலின் அரசியலினை முடிவிற்கு கொண்டுவருவதற்காக இவ்வாறான நடவடிகைகளை மேற்கொள்வதாக பொது மக்கள் கருதுகின்றார்களே?
உவைஸ் ஹாஜி:- நான் அரசியல்வாதி, பிரபல்ய தொழில் அதிபர் மற்றும் வியாபாரி என்பதற்கு அப்பால் நான்கு பிள்ளைகளின் சிறந்த தகப்பன் என்ற வகையில் ஒரு சாதாரன மனிதனாக வாழ்ந்து வருக்கின்றேன். நான் அரசியலினை வைத்து இலாபமீட்டிக்கொள்ளும் மனிதனாக வாழவில்லை. அரசியலினை பொது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதமாகவே பயண்படுத்துக்கின்றேன். அரசியலில் நான் இருந்தாலும் அலட்டிகொள்ளமாட்டேன் இல்லாவிடினும் அலட்டிக்கொள்ளப்போவதுமில்லை. எனது மனைவி, பிள்ளைகள், எனது கெளரவம் என்பவற்றினை அடமானம் வைத்து அரசியல் இலாபமீட்டும் அரசியல்வாதியாக என்னை நான் மாற்றிக்கொள்ள தயாரில்லை. அரசியல் என்பது எனது வாழ்வல்ல. எனது வாழ்க்கை என்பது எனது குடும்பம், பிள்ளைகள், வியாபாரம் ,வீடு, சமூதாயம் என்றுதான் எனது வாழ்க்கையினை கொண்டு சென்றேன். ஆனால் அசாட்சாலி முழு நேர அரசியல்வதியாகும். அவருக்கு இதில் அரசியல் இலாபம் இருக்குமோ அல்லது இல்லாமல் இருக்குமோ என்பது பற்றி என்னால் கூறமுடியாது. இவ்விடயத்தில் எந்தவொரு அரசியல் பின்னணியும் கிடையாது. எந்தவொரு தகப்பனும் தனது மனைவியை வைத்து அரசியல் இலாபம்மீட்டுவதனை இவ்வுலகில் கண்டிருக்க வாய்ப்பில்லை. இதனை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள். அந்தவகையிலே நான் எதற்காக எனது குடும்பத்தில் இடம்பெற்ற இப்படிப்பட்ட பிரச்சனையினை ஊடகமயப்படுத்தினேன் என்பது மக்கள் நிச்சயமக உணர்ந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்திருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய பருவ வயதினை அடைந்துள்ள நான்கு பிள்ளைகளும் எந்தப்பக்கம் இருக்கின்றனர்?
உவைஸ் ஹாஜி:- நீங்கள் கூறியதனைப் போன்று எனது நான்கு பிள்ளைகளும் பருவ வயதினை அடைந்தவர்களாக காணப்படுக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நன்கு பிள்ளைகளும் இலங்கையில் உள்ள முன்னணி பாடசாலைகளில் தங்களது கல்வியினை தொடர்ந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தாயா அல்லது தகப்பனா பிழைவிட்டிருக்கின்றார்கள் என்பது பற்றி அவர்கள் தீர்மானத்தினை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர். இந்த பிரச்சனைகளைக் கூட சரிசமனாக என்னுடன் உட்கார்ந்து பேசக்கூடியவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே எனது நான்கு பிள்ளைகளும் இறுதி மூச்சுவரைக்கும் என்னுடன் இருப்பார்கள் என்பதனை கூறிக்கொள்வதோடு ஒரு கட்டத்தில் எனது மனைவியை நான் மன்னித்து விட்டாலும் எனது பிள்ளைகள் மன்னிக்கமாட்டார்கள் என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- இரகசியமான முறையில் கையாளக்கூடிய இப்பிரச்சனையினை நீங்கள் ஊடகமயப்படுத்தியுள்ளீர்கள் என்றால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் ஏதாவது எதிர்பார்ப்பினை மனதில் வைத்துத்தான் களத்தில் இறங்கியிருப்பீர்கள். அவ்வாறு நீங்கள் மனதில் வைத்து களத்தில் இறங்கினீர்கள்?
உவைஸ் ஹாஜி:- இதனை ஊடகமயப்படுத்தியமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனது மனைவி என்னை விட்டு பிரிந்த சந்தர்ப்பத்தில் எனக்கும் தேவையாக இருந்தது இப்பிரச்சனையினை மறைத்து, எவ்வாறாவது அதனை மறந்து அல்லது எனக்கு மனைவியாக இல்லாவிட்டாலும் எனது பிள்ளைகளுக்கு தாய் இஸ்தானத்திலாவது எனது மனைவி வாழவேண்டும் என்பதனையே நான் எதிர்பார்த்து முயற்சி செய்திருந்தேன். அதற்காக முஸ்லிம் சமூகத்தினை சார்ந்த ஆலிம்கள், உலமாக்கள், அரசியல்வாதிகள், எனது மனைவியினுடைய குடும்பம், போன்றவர்களுடன் கலந்துரையாடியிருந்தேன். அந்தகாலப்பகுதியில் இவ்விடயம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. அசாட்சாலியுடன் எனது மனைவி வீட்டினை விட்டு வெளியேறிய விடயம் யாருக்கும் தெரியாத விடயமாக காண்பித்து மறைத்து வந்தேன்.
எனது மனையினை அசாட்சாலியிடமிருந்து மீட்டு கொண்டுவருவதற்காக உலமாக்கள், மற்றும் சமூகப்பெரியார்கள், அரசியல்வாதிகள் என பலரினதும் உதவினை நாடியும் எனக்கு பலன்கிடைக்கவில்லை. காலப்போக்கில் நாட்கள் கிழைமைகள் ஆகின, கிழமைகள் மாதங்களாகின்ற சந்தர்ப்பத்தில் தானாகவே அசாட்சாலியுடன் எனது மனைவி இருக்கின்றார் என்ற விடயம் பரவத்தொடங்கியது. பலர் என்னிடம் நேருக்கு நேர் கேட்கத்தொடங்கினர் பலர் என்மீது வைத்துள்ள மரியாதை காரணமாக வினவுவதற்கு வெட்கப்பட்டனர். ஆனால் மறுபக்கத்தில் நாடு பூராகவும் இவ்விடயம் பரவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் இவ்வாறாக ஊடகமயப்படுத்தும் முடிவினை எடுப்பதற்கு என்னை தூண்டியது. எமது சமூதயத்தில் உலமாக்கள், கல்விமான்கள், பெரியோர்கள் என்று பார்க்கின்ற பொழுது இவ்வாறு சமுதாயம் சமுதாயம் என்ற பார்வையில் மறைத்து வருவதனாலேயே இவ்வாறான அசாட்சாலியைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பயமில்லாமல் தப்பிழைக்கின்றனர். ஆகவே இதனை சமூதாயம் விளங்கிக்கொள்ள வேண்டும். எனக்கு இடம்பெற்ற இவ்வாறான துக்ககரமான சம்பவம் இதனோடு இந்த நாட்டில் வேறோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எனதும் எனது பிள்ளைகளின் கெளரவத்தினை பொருட்படுத்தாமல் இறுதிக்கட்டத்தில் இவ்வாறான முடிவினை எடுத்துள்ளேன். சமூகத்தில் இருக்கின்ற உலமாக்கள் முஸ்லிம் மதத்தலைவர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் இப்பிரச்சனையினை சமூகப்பிரச்சனையாக கருத்தில் கொண்டு சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.