உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை !

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 
இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Ranil

எதிர்வரும் நவம்பர் மாதம் அரச வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, ஜனவரி, பெப்ரவரி மாத இறுதியில் அந்த நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்து விடும் என, சுட்டிக்காட்டிய பிரதமர், இதன்படி மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய ஆற்றல் மிக்க குழுவினர் அவசியம் எனவும், அரசியல் கட்சிகளுக்கு சுயாதீனமாக தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.