திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் தரப்படும் என நான் வெளிப்படையாக கூறவில்லை : ஹக்கீம் !

தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்
நாட்டில் தற்போது தேசியப்பட்டியல் புதாகரமாக மாறிவருவதோடு இது தொடர்பான எதிர்பார்ப்புகள் தங்களது ஊர்களுக்கு வழங்க வேண்டும்,மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கி இருக்கின்ற இத் தருனத்தில் கட்சியின் போராளிகள் உரிமைப் போராட்டம் நடாத்தும் சூழல் உருவாகியுள்ளது.

DSC04685_Fotor

இவ்வாறிருக்க தேசியப்பட்டியல் விவகாரத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்குவது தொடர்பில் சாதகமான பல கருத்துக்களை பல்வேறு கூட்டங்களில் கூறி வந்துள்ளேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சியை பாதுகாத்து எமது மக்களின் அபிலாசைகளை வெண்றெடுப்பதற்கும் கட்சி பிழவு படும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பும் தலைமையிடம் உள்ளது ஆகவே பொறுப்புடன் கூறுகின்றேன் அதனால் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் தரப்படும் என நான் வெளிப்படையாக கூறவில்லை பொருத்தமான தருனத்தில் தலைமை இது தொடர்பான நியமனத்தை வழங்கும் என்று மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நேற்று மாலை 27 நடைபெற்ற கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனும்,போராளிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

DSC04715_Fotor
தலைமைத்துவம் மூடி மறைத்து செல்கின்றதென நீங்கள் ஆதங்கப்படத்தேவையில்லை பக்குவமாக இவ்விடயத்தை கையாள வேண்டிய நிலை தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. சரியான விடயத்தை சரியான நேரத்தில்; செய்ய வேண்டும்.சரியான விடயத்தை பிழையான நேரத்தில் சரியென நினைத்து செய்வது பிழையாகி விடும் ஆகவே திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் ஏலவே ஒரு தடவை வழங்கப்பட்டுள்ளது. மூதூரில் தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட வேளை ஒருவர் மாவட்டத்தில் இருக்கத்தக்க கிண்ணியாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் இம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

 

திருகோணமலை மாவட்டம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற இவ்வேளையில் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் வழங்காமல் இருக்க முடியுமா? என தேசியத் தலைவர் தனதுரையில் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்;.தௌபீக் திறமையானவர்,சிறந்த முறையில் வேலை செய்யக் கூடியவர் எமது கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுள் வேகமான துடிப்பான ஒருவர் அவரை கட்சி எப்போதும் இழக்காது பிரதி அமைச்சர் வழங்கும்போது முதலில் தலைமைத்துவம் திருகோணமலை மாவட்டத்திற்கே வழங்கியது எனவே தேசியப்பட்டியல் காலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரைவாசி காலப்பகுதியோடு முதல் யாருக்கு வழங்குவதென்றும் தலைமைத்துவமே முடிவு செய்யும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

வேலைவாய்ப்புகள் வழங்கும் விடயத்தில் கட்சியும், தலைமையும, கட்சியில்; அதிகாரத்தில் உள்ளவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, பொறுப்புனர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான சந்திப்புகளில் எல்லா ஊர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் தனியாக வந்து மாட்டிக் கொண்டுள்ளேன்.தற்காலிகமாக இருவரை நியமனம் செய்துவிட்டு மிகவும் அவஷத்தைப்படுகின்றேன்.ஏலவே இதனை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜே.எம்.லாஹீர் முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்,முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உட்பட முன்னால் மக்கள் பிரநிதிகள் கட்சியின் போராளிகள் என பலர் கலந்து கொண்டனர்.