யாழ். வலி வடக்கில் 60 குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதி !

யாழ் வலி வடக்கில் 60 குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது.

வலி வடக்கில் காணப்படும் குடியேற்றதிட்டத்தில் வாழ்ந்தவர்க​ளை குடியமர்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

IN10_TAMILS_16883f

குறித்த குதியில் வர்தலைவிழா தொடக்கம் சாந்த சந்தி வரையிலான வீதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வலி வடக்கிற்கான மையானத்தினூடான பிரதான வீதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

மேலும் ஒட்டகப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வலி வடக்கிலுள்ள 07 ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எனினும் மீள்குடியேற அனுமதி கிடைத்துள்ள பகுதியில் மக்களை மீள்குடியமர செய்வதற்கான தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் விரைவில் தினம் அறிவிக்கப்படும் எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மீள்குடியேற்ற அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.