மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 14 பேர் இந்தியர்கள் !

 

புனித ஹஜ் யாத்திரையின் போது மக்கா சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 14 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அத்துடன் 13 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

5143

உயிரிழந்த 14 இந்தியர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர், குஜராத்தில் 9 பேர், ஜார்கண்ட்டில் 2 பேர், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, மினா நகரில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலி ஆனார்கள். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 

 745