கோட்டாபாயவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ? : அநுர கேள்வி

 காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை அல்லது எவன்காட் மெரிடய்ம் நிறுவனம் (Avant Garde) தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 

anura kumara

2012.10.20 க்கு முன்னர் கடல் பாதுகாப்பு சேவை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், பின்னர் முன்னாள் பதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலையீட்டால், தேசிய பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கடல் பாதுகாப்பு சேவை எவன் காட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 

அரசியலமைப்பின் 4 சரத்தின் படி, நாட்டின் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை செலுத்தும் விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியது ஜனாதிபதியே. எனினும் ஜனாதிபதியின் அவ்வாறானதொரு தீர்மானம் தொடர்பாக அறியக் கிடைக்கவில்லை. 

இவ்வாறு தேசிய பாதுகாப்பை பாதிக்கும் முடிவுகள் எடுப்பதற்கு பாதுகாப்பு செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றதா? 

அவ்வாறு அதிகாரம் இல்லாவிட்டால் அவருக்கு எதிராக​ எடுக்கும் நடவடிக்கை என்ன என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.