ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் வீழ்ந்தது டெல்லி !

211863

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதல் ஓவரிலேயே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். 

அடுத்து டெல்லி அணியின் கேப்டன் டுமினி களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 32 ரன்னாக இருக்கும்போது டுமினி 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து யுவராஜ் சிங் களம் இறங்கினார். இவர் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் வருண் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் மாத்யூஸ் அவுட் ஆனார். அப்போது டெல்லியில் 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. 

5-வது விக்கெட்டுக்கு அகர்வால் உடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். அகர்வால் 27 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, ஜாதவ் 33 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 18.2 ஓவரில் 95 ரன்களில் சுருண்டது. 

பெங்களூர் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் (3), வருண் ஆரோன் (2), வியசே (2) விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக கெயிலும் விராட் கோலியும் களமிறங்கினார்கள். வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். மறுமுனையில் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பெங்களுர் அணி 10.3 ஒவரில் 99 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட கெயில் 40 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். கோலி 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக சிறப்பாக பந்து வீசி 4 ஒவரில் 24 விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை விழ்த்திய வருண் ஆரோன் தேர்வு செய்யப்பட்டார்.