உலக டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முதலிடம் !

உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (15) வெளியிடிருந்தது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தர நிலையாக 125 ஆவது இடத்தை பிடித்துள்ளார், சோம்தேவ் 12 இடங்கள் பின்தங்கி 164 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

4SANIAPTI11_23_201_2129929g

சகெத் மைனெனி 195 ஆவது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 218 ஆவது இடத்திலும் உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 13 ஆவது இடத்திலும், லியாண்டர் பெயஸ் 33 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், மார்ட்டினா
ஹிங் (சுவிட்சர்லாந்து) 2 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.