4 மணி நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தலைக்கவசம் அணியாத 141 பேர் !

 
பழுலுல்லாஹ் பர்ஹான்
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் ,வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை அமுல்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுவுகளிலும் கடந்த 11 வெள்ளிக்கிழமை வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
DSC07275_Fotor
இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வீதியில் நடத்திய சோதனையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிந்து செல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 141 பேருக்கும் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகனக் காப்புறுதி இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 10 பேருக்கும் போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 1 ஒருவருக்கும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.
மேற்படி வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறிய இவர்கள் 14 தினங்களுக்குள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு சென்று அவர்களுக்கான தண்டப்பண பற்றுச் சீட்டை பெற்று அதை செலுத்த வேண்டும். இதற்கு தவறுபவர்கள் காத்தான்கடி பொலிசாரினால் கூறப்படுகின்ற தினத்திற்கு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் மேலும் தெரிவித்தார்.
இவ் வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
மேற்படி வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணித்து செல்லாமல் மோட்டார் சைக்கில் செலுத்திய 141 பேர்களில் அதிகமானோர் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.