வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து பேச்சு வார்த்தை நடந்தவுள்ளது.
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வடக்கு, கிழக்கில் எதுவித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் காணி அங்கு வாழ்ந்த மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படுமெனத் தெரிவித்த போதும் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நிர்வாக மாற்றங்கள் குறித்தும் இதுவரை காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.