அரசியலமைப்புப் பேரவை நாளை (10) கூடவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
தலைவராக சபாநாயகரும், பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் அரசியலமைப்புப் பேரவைக்கு உத்தியோகப்பூர்வமாகவும் உள்வாங்கப்படுவார்கள்.
அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பிரதமர் தரப்பு பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் இன்று நியமிக்கப்பட்டனர்.