அபு அலா
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திசாலையில் சிகிச்சை பெற்று குனமடைந்த ஒருவர் வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடத்தை அன்பளிப்புச் செய்துள்ளார்.
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இன்று புதன்கிழமை (09) வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பெண் நோயளர் விடுதியின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எப்.எப்.பர்வீன் மற்றும் டாக்டர்களான எம்.ரீ.எப்.நப்தா, நைரோஸா, ஜே.யூசுப், பாரம்பரிய வைத்தியர் வி.அப்துல் றஹீம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.முனவ்வர், எஸ்.எம்.றிஜால்டின், யூ.கே.சம்சுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பரின் ஆலோசனையின் கீழ் கடந்த 32 நாட்களாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்ததன் பின்னர் அவர் குனமடைந்ததையிட்டு வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடத்தை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்து வைத்தார்.