மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சாந்தனி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று கூடிய மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு அந்தக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இராதகிருஷ்ணனை தெரிவு செய்தது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்தலைவர் சந்திரசேகரனின் மனைவியுமான சாந்தனி சந்திரசேகரனிடம் அததெரண வினவியது.
அதற்கு பதிலளித்த அவர்,
இராதாகிருஷ்னனிற்கு தலைவர் பதவியை கொடுத்தால் தனக்கு செயலாளர் பதவியையோ அல்லது அதற்கு நிகரான ஒரு பதவியையோ தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனாலேயே கட்சித் தலைவராக இராதகிருஷ்ணனை நியமிக்க அனுமதித்தேன். என்றாலும் அவர்கள் கூறியது போல் எனக்கு கட்சியில் எந்த முக்கிய பதவிகளும் வழங்கப்படலில்லை.
இன்று நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் தான் பங்கேற்றிருந்த போதிலும், அனேகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டனர்.
ஆகவே இந்த தீர்மானத்திற்கு எதிராக தான் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக சாந்தனி சந்திரசேகரன் தெரிவித்தார்.