விடைபெறுகின்றேன் !

 

 அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வுபெறுவதற்கான சரியான தருணம் இதுவே என அவர் அறிவித்துள்ளார். உபாதைகளால் தடுமாறிவந்த ஷேன் வொட்சன், அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதிலும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தார்.

shane-watson-heading-home-after-being-dumped-628

இதன் காரணமாக, ஆஷஸ் தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே விளையாட வாய்ப்புக் கிடைத்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான போராட்டக் குணம் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்துள்ள வொட்சன்,

 

 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான உடல், உள, நுட்ப அளவை எண்ணும் போது, ஓய்வுபெறுவதற்கு இதுவே சரியான தருணமெனத் தெரிவித்துள்ளார். 59 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய வொட்சன், 4 சதங்கள், 24 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 35.19 என்ற சராசரியில் 3,731 ஓட்டங்களையும், 3 ஐந்து விக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 33.68 என்ற சராசரியில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.