இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியது !

 இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Sarath-Fonseka3

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 

“சீனாவுடன் எப்போதும் இலங்கை நெருக்கமான உறவை பேணும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடிப்படையில், சீனாவின் ஆதரவு இல்லையென்றால், போரை எம்மால் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது, எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பழமையான மற்றும் உறுதியான நண்பர்களுள் சீனாவும் ஒன்று. நாம் அந்த நாட்டுடன் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். அதனை நாம் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். 

மேலும் சீனா எமக்கு செய்ததை நாம் மறந்து விடக்கூடாது, எனவும் பொன்சேகா இதன்போது கூறியுள்ளார்.