கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிறு­வனால் கனே­டிய அர­சாங்கம் சர்ச்­சையில்…!

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள் வெளி­யாகி உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், அவ­னது தந்தை அந்த சிறு­வனின் சட­லத்­தையும் அவ­னுடன் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த அவ­னது சகோ­தரன் மற்றும் தாயின் சட­லங்­க­ளையும் நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக சிரிய கோபேன் நக­ருக்கு வெள்­ளிக்­கி­ழமை திரும்­பி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் இறந்த சிறு­வ­னான அயி­லனின் அத்­தை­யான கன­டாவில் வசிக்கும் தீமா குர்தி கூறு­கையில், அயி­லனின் குடும்­பத்­தினர் கன­டாவில் புக­லிடம் கோரி­யி­ருந்­த­தா­கவும் ஆனால் கனே­டிய அர­சாங்கம் அவர்­க­ளது புக­லி­டக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரித்­தமை கார­ண­மா­கவே அவர்கள் இந்த ஆபத்து மிக்க படகுப் பய­ணத்தை மேற்­கொள்ளும் நிர்ப்­பந்­தத்­திற்கு உள்­ளா­ன­தா­கவும் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

 

அவ­ரது குற்­றச்­சாட்­டிற்கு கனடா மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

அவ்­வா­றான புக­லி­டக்­கோ­ரிக்கை விண்­ணப்பம் எதுவும் கடலில் மூழ்கிப் பலி­யான சிறு­வனின் தந்தை அப்­துல்லாஹ் குர்­தியால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என கனே­டிய குடி­வ­ரவு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 

அப்­துல்லாஹ் குர்­தியின் சகோ­த­ரனால் அந்த விண்­ணப்பம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­ததால் அதனை தாம் நிரா­க­ரிக்க நேர்ந்­த­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.
இது தொடர்பில் தீமா குர்தி கூறு­கையில், அப்­துல்லாஹ் குர்­திக்­கான புக­லி­டக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, தாம் அவரைத் தமது ஏற்­பா­த­ரவில் கன­டா­வுக்கு வரவ.ழைக்கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

“நேர்­மை­யுடன் நான் கூறு­வது என்­ன­வென்றால், நான் இந்த சம்­ப­வத்­துக்கு கனே­டிய அர­சாங்­கத்தை மட்டும் குற்­றஞ்­சாட்­ட­வில்லை. முழு உல­கை­யுமே குற்­றஞ்­சாட்­டு­கிறேன்” என அவர் தெரி­வித்தார்.

 

 

கனே­டிய அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி

அக­தி­களை ஏற்­றுக்­கொள்­ளாமை குறித்து கனே­டிய பழை­மை­வாத கட்­சியைச் சேர்ந்த பிர­தமர் ஸ்டீபன் ஹார்பர் எதிர்க்­கட்­சி­யி­னரின் கடும் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார்.
கனே­டிய அதி­கா­ரிகள் 25,000 சிரிய அக­தி­களை நாட்­டுக்குள் பிர­வே­சிக்க அனு­ம­திக்க வேண்டும் என அந்­நாட்டு எதிர்க்­கட்­சி­யான லிபரல் கட்­சியின் தலைவர் ஜஸ்டின் திரு­டியு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

மேற்­படி விவ­கா­ரத்தால் கனே­டிய குடி­வ­ரவு அமைச்சர் கிறிஸ் அலெக்­ஸாண்டர், எதிர்­வரும் ஒக்­டோபர் மாத தேர்­தலில் மீளப் போட்­டி­யி­டு­வ­தற்­கான தனது பிர­சார நட­வ­டிக்­கையை பகு­தி­யாக இரத்துச் செய்யத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

பலி­யான சிறு­வனின் தந்தை அதி­ரச்­சியில்

கடலில் மூழ்கிப் பலி­யான சிறு­வ­னான அயி­லனின் தந்தை அப்­துல்லாஹ் குர்தி, தனது குடும்­பத்­தினர் அனை­வ­ரையும் படகு அனர்த்­தத்தில் பறி­கொ­டுத்­தமை தொடர்பில் கடும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

தனது மனை­வி­யான ரெஹான், மகன்­க­ளான அயிலன் மற்றும் காலிப் (5 வயது) ஆகி­யோரின் சட­லங்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த சவப்­பெட்­டிகள் சகிதம் காரொன்றில் அப்­துல்லாஹ் குர்தி கோபேன் நக­ருக்குள் பிர­வே­சித்த போது, அவ­ருடன் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அந்­ந­க­ருக்குள் பிர­வே­சிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. அப்­துல்லாஹ் குர்தி கோபேன் நக­ருக்குள் பய­ணத்தைத் தொடர ஏனை­ய­வர்கள் நகர எல்­லையில் தடுத்து நிறுத்­தப்­பட்­டார்கள்.

 

உலகின் மிகவும் அழ­கான சிறு­வர்கள்

அப்­துல்லாஹ் குர்தி கோபேன் நக­ருக்கு செல்­வ­தற்கு முன் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டியில், தாம் துருக்­கியை விட்டுப் புறப்­பட்டு சிறிது நேரத்தில் தாம் பய­ணித்த படகு விபத்­துக்­குள்­ளா­ன­தா­கவும் இதன்­போது தனது மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் காப்­பாற்றத் தான் மேற்­கொண்ட முயற்சி தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­த­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.
“எனது பிள்­ளைகள் உலகில் மிகவும் அழ­கான பிள்­ளைகள். உலகில் ஒரு­வ­ருக்கு தனது பிள்­ளை­களை விடவும் மிகவும் பெறுமதியான ஏதா­வது உள்­ள­தா?” என அவர் இதன்­போது கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

 

படகுப் பய­ணத்தை விரும்­பாத சிறு­வனின் தாய்

மேற்­படி படகுப் பய­ணத்தின் போது உயி­ரி­ழந்த அயி­லனின் தாயா­ரான ரெஹான், தனக்கு நீச்சல் தெரி­யாது என்­பதால் அள­வுக்­க­தி­க­மான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் செல்லும் படகில் பய­ணத்தை மேற்­கொள்ள அஞ்­சு­வ­தாக கூறி­ய­தாக தீமா குர்தி தெரி­வித்­துள்ளார்.
தொலை­பேசி மூலம் .தன்னைத் தொடர்பு கொண்டு உரை­யா­டிய வேளை­யி­லேயே ரெஹான் இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­த­தாக அவர் கூறினார்.

 

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்டு
பற்கள் பிடுங்­கப்­பட்ட கொடூரம்

அயி­லனின் தந்­தை­யான அப்­துல்லாஹ் குர்தி கடந்த வருடம் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்­ட­தா­கவும் அதன்போது அவருடைய பற்கள் அனைத்தையும் பிடுங்கி தீவிரவாதிகள் அவரைச் சித்திரவதை செய்திருந்ததாகவும் தீமா குர்தி கூறியதாக கனேடிய ஊடகவியலாளரான தெர்றி கிளேவின் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தீவிரவாதிகளிடமிருந்து ஒருவாறாகத் தப்பி தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்ட அவர், பின்னர் எல்லையைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான விசா வழங்கப்படாததால் அவர்கள் படகுப் பயணத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.