கட்சித் தலைவர்களாக செயற்படும் சிறப்புரிமையை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது !

தாம் உள்ளிட்ட சிலருக்கு பாராளுமன்றத்தினுள் கட்சித் தலைவர்களாக செயற்படும் சிறப்புரிமையை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

uthaya

தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களை மாத்திரம், கட்சித் தலைவர்களாக அங்கீகரிப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதென உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.

இதன்பிரகாரம் மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சில கட்சிகளின் தலைவர்கள் கட்சித் தலைவர்களாக பாராளுமன்றத்தில் செயற்படுவதற்கான சிறப்புரிமையை இழக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.