உள்நாட்டுப் போரால் சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளை சில நாடுகள் ஏற்க மறுக்கின்றன.
அன்றாடம் இதுபோன்ற அகதிகளைப் பற்றி வெளியாகும் செய்திகள் நெஞ்சை உருக்குகின்றன.
அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க பல நாட்டு அரசுகளே யோசிக்கும் நிலையில், எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதில் சிரியா நாட்டு அகதிகள் தங்கவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதற்காக கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் ஏதேனும் ஒரு தீவை தனக்கு விலைக்கு விற்குமாறு அவர் கோரியுள்ளார்.