இரா. சம்­பந்தன் எதிர்க் கட்சித் தலைவரானது நாட்­டிற்கு நல்ல சகு­ன­மாகும்-எம்.ஏ. சுமந்­திரன்

 

தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் தேசிய நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் அமைப்புச் சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­மானால் பிர­தான எதிர்­க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

Sumanthiran_6

புதிய பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது நாள் அமர்வில் பிர­த­மரால் முன்­வைக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெறும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சுமந்­திரன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில், 1977 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் எமது தலைவர் இரா. சம்­பந்தன் இரண்­டா­வது தமிழர் எதிர்க்­கட்சி தலைவர் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு எமது நல்­வாழ்த்­துக்­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமிர்­த­லிங்கம் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மனம் பெற்றார். அந்­த­வ­ரி­சையில் 1983 இல் கொண்டு வரப்­பட்­ட­தான அர­சியல் அமைப்பில் ஆறா­வது திருத்தச் சட்­டத்தின் துர­திர்­ஷ்ட வசத்தால் 1983 காலப்­ப­கு­தியில் இரா. சம்­பந்தன் பாரா­ளு­மன்ற பிர­தி­நிதி என்ற அந்­தஸ்­தினை இழந்தார். அதி­லி­ருந்து மீண்டும் அவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக உயர்ந்­துள்ளார். இது நாட்­டிற்கும் நல்ல சகு­ன­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

தேசிய கட்­சிகள் இணைந்து தேசிய அர­சா ங்­கத்தை நிறு­வி­யுள்­ளன. தேசிய அர­சாங்கம் தொடர்பில் உரை­யாற்­றியோர் தமிழ் மக்க ளின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்றே வலியுறுத்தினர். இரு தரப்பினரும் இதனையே பேசினர். இது செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.