ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான்.
தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.
ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை இந்த புகைப்படத்தை பார்த்த பிறகாவது மாறுமா?
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன ஒரு குழந்தையின் இந்த படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ளது.
உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா?
இறந்து போன இந்த குழந்தையின் ஆன்மா நம் அனைவரையும் மன்னிக்குமா?