சிறப்பாக தற்கொலை செய்வது எப்படி?89 இணையத்தளங்களில் தேடிப்பார்த்து தெற்கொலை செய்த பெண் !

 13வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூரை சேர்ந்த பேஷன் டிசைனர், சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன் வழியாக இணையதளங்களில் தேடுதல் நடத்தியுள்ள தகவலை தடயவியல் ஆய்வு மையம் அம்பலப்படுத்தியுள்ளது. 

இரு நாட்களில் அவர் மொத்தம் 89 வெப்சைட்டுகளை ஃரெபர் செய்துள்ள தகவல் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பெங்களூரை சேர்ந்த 26 வயது பேஷன் டிசைனர் இஷா கன்டா. 

178217301602-1441188833-isha-handa-s-s-600

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருட்டும் வரை காத்திருந்த இஷா, இரவு 8.30 மணிக்கு13 மாடி கொண்ட குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை செய்வதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பிருந்தே, இஷா எப்படி சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது என்பதை அறிய கூகுளில் தேடி பல்வேறு வெப்சைட்டுகளை படித்துள்ளார். 

மொத்தம் 89 வெப்சைட்டுகளை அவர் 48 மணி நேர இடைவெளியில் பார்த்துள்ளாராம். 

தலைகீழாக குதிப்பதா அல்லது பக்கவாட்டில் குதிக்க வேண்டுமா என்பதையெல்லாம் கூட கூகுளில் தேடி பார்த்துள்ளார் இஷா. 

13 மாடி கட்டிடத்தை தேடிய இஷா எப்படியெல்லாம் தற்கொலைகள் செய்யலாம், எது சிறந்த தற்கொலை வழிமுறை, பெங்களூரில் உயர்ந்த கட்டிடங்கள் எங்கெல்லாம் உள்ளன, என்பது போன்று பல்வேறு அம்சங்களை இஷா தனது ஸ்மார்ட் போனிலுள்ள இணையத்தின் மூலம் தேடிப்பிடித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. 

அவர் திட்டமிட்டபடியே, தற்கொலை முழுமையடைந்துள்ளது.