எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் சீநெட்டி படைப்புக்கு மூன்றாம் இடம் !

அரூஸ்

கலாசார அலுவல்கள் திணைக்களம் , கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட திறந்த கையெழுத்துப் போட்டி -2014 பொத்துவில் பிரதேச செயலகத்தின் மூலமாக எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் (சீநெட்டி) கிராமிய ஆய்வியல் தேசிய போட்டிக்காக வேண்டி அனுப்பப்பட்டது.

3-Fotor

 

தேசிய ரீதியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் தீர்ப்பின்படி தேசிய ரீதியில் சீநெட்டி படைப்புக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கான  சான்றிதழ் நேற்று 27 செத்சிரிபாய பத்தரமுல்லவில் அமைந்துள்ள கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பணிப்பாளர் அனூசா கோகுல பெர்னாந்து அவர்களால் வழங்கப்பட்டுள்ளது…அதே சந்தர்ப்பத்தில் அம்பாரை மாவட்டத்தில் ஏனைய நிகழ்வுகளான. கவிதைப் போட்டியில் ஒலுவில் வஹாப்தீனின் அத்தாங்கு முதல்நிலை கிடைத்துள்ளது. சிறந்த நாவலுக்கான தேசிய சான்றிதழ் இறக்காமம் பர்சானா றியாஸ் அவர்களுக்கும் கிடைத்தமை பாராட்டத்தக்கது.

 

சீநெட்டிக் கிராமிய ஆய்வினை மேற்கொண்டவர் கவிதை, பேச்சு, ஊடகம், கல்விப்பணி அனைத்திலும் சிறந்த ஆளுமையுள்ள பொத்துவில் தாஜகான் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத்துறையில் இன்னும் பல விருதுகள் பெற அம்பாரை மாவட்ட தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் வாழத்துகின்றது.

1_Fotor DSCN1405_Fotor