சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த இலக்கமொன்று தொடர்பில் பலரும் கவனிக்க தவறிவிட்டனர்.
அவ்வாறு கவனிக்கப்படாத இலக்கம் தொடர்பான பதிவுகளே இது.
குமார் சங்கக்காரவின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து காணப்பட்ட இலக்கம் 134.
சங்கக்கார இறுதியாக விளையாடிய 20-20 போட்டியின் போது 134 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
அந்த போட்டியில் குமார் சங்கக்கார ஒரு 6 ஓட்டம் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 35 பந்துகளுக்கு முகம் கொடுத்து 52 ஓட்டங்களை ஆட்டமிளக்காது பெற்றுக் கொண்டார்.
இதேவேளை குமார் சங்கக்கார இறுதியாக விளையாடிய ஒரு நாள் போட்டியின் போது 134 ஓட்டங்களே எதிரணியினருக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் குமார் சங்கக்கார 96 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் நேற்றைய தினம் நிறைவடைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது இனிங்ஸில் இலங்கை அணி 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தனது 134 ஆவது போட்டியுடனேயே கிரிக்கெட் அரங்கிலிருந்து குமார் சங்கக்கார விடைபெற்றமை விசேட அம்சமாகும்.