காணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டு அமர்வு இன்றுடன் நிறைவு !

missing 

 காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது கட்ட அமர்வு இன்றுடன் நிறைவுபெறவுள்ளது.

இன்றைய தினம் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்குமாறு 187 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (25) பிற்பகல் மூன்று மணி வரை கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக மண்முனை தென்எருவில்பற்று மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலகங்களில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் சுமார் 500 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தவிர காணாமற்போனோர் தொடர்பில் 500 இற்கும் மேற்பட்ட புதிய முறைப்பாடுகளும் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன

யுத்தம் நிலவிய காலப் பகுதியில் காணாமற்போன தமது உறவினர்களை கண்டுபிடித்துத் தருமாறு இந்த அமர்வுகளின்போது மக்கள் சாட்சியமளித்திருந்தனர்.