சமூக நீதியினை நிலைநாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்ப முடியும்- மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

பழுலுல்லாஹ் பர்ஹான்
மனித உறவுகளில் மோதல் என்பது பொதுவாக முரண்பாடுகள் உள்ள திறத்தவர்களுக்கிடையே காணப்பட்டாலும், இது ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றது.
மனித சமுதாயத்திற்கு ஒருமைப்பாடும், இணக்கப்பாடும் சமூக நல்லிணக்திற்கு வழிவகுக்கின்றது என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
DSC02877_Fotor
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “சமூக நல்லிணக்கம்” தொடர்பான சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஏறாவூர் மிச்நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் 23.08.2015 நேற்று சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. எம்.எச்.சபூஸ் பேகத்தின் தலைமையில் நடைபெற்ற போது, வளவாளர் அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
அண்மைக்காலமாக மோதல்களை தீர்த்து வைப்பதற்கு வன்முறைகளை வழிமுறைகளாகக் கையாளுகின்றனர்.
மோதல் தடுப்பு என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இது இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படணே;டும்.
ஒன்று மோதல் தோற்றம் பெறுவதற்கு முன்னரே  அதன் அறிகுறிகளை அறிந்து அவற்றை தடைசெய்வது மற்றயது மோதல் தோற்றம் பெற்று விட்ட நிலையில் பக்கச்சார்பின்றி உடனடியாக சாதாரண நிலைமைக்குத்  திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது. இம்முறைமை எவ்வாறாயினும் சமூக நீதி என்பதுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்புடையதல்ல. முரண்பாடு என்பது முரண்படு அக்கறைகளைக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களிடையேயான உறவுமுறையாகும்.
ஆனால் வன்முறை என்பது உடல்சார், உளசார், சமூக அல்லது சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி தமது முழுமையான ஆற்றலை அடைவதனைத் தடுக்கின்ற செயல்கள், சொற்கள், மனப்பான்மைகள், கட்டமைப்புகள், முறைமைகள் என்பவைகளை உள்ளடக்குகின்றது.
இணக்கப்பாட்டினை நிரந்தரமாகப் பேண வேண்டுமாகவிருந்தால் இருபக்க பேச்சுவார்த்தை அவசியம.; அதாவது இரு தரப்பினரும்; சாத்தியமான விருப்பத் தேர்வுகள் பற்றி நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டு தீர்வொன்றை அடைவதனை இயலச்செய்கின்ற செயற்பாடாகும்;.
இது சமாதானத்திற்கு வழிவகுக்கும். சமாதானம் என்பதை ஒரு வன்முறையில்லாத நிலை எனக் கூறினாலும் நிரந்தர சமாதானம் அடையப்பட வேண்டுமாகவிருந்தால் அது சமுகத்தின் அடிமட்டத்திலேயே கட்டியெழுப்பப்பட வேண்டும்  என மேற்கண்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.
DSCF3655_Fotor 20150822_091942_Fotor