ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன,துமிந்த திஸாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம, ஏ.எச்.எம். பௌசி, எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்டோருக்கே இந்தப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த 20 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.