தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று அனுமதி!

Unknown

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான தேசிய அரசாங்கமொன்றை முன்னெடுப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உத்தேச தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.