தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள்; நிமல் சிறி­பால டி. சில்­வா­வுக்கு பிரதி பிர­தமர் பத­வி ?

 

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்திரக்கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்­து­கொள்­வது தொடர்­பி­லேயே இரண்டு தரப்­புக்­க­ளுக்கும் இடையில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

அதன்­படி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்ன­ணி­யி­லி­ருந்து பதுளை மாவட்­டத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யுள்ள நிமல் சிறி­பால டி. சில்­வா­வுக்கு பிரதி பிர­தமர் பத­வியை வழங்­கு­வது குறித்து ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் வெற்­றி­பெற்­றுள்ள மைத்­திரி ஆத­ர­வா­ளர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தில் பங்­கெ­டுப்­பார்கள் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வி­களை பெறு­மாறும் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த அழைப்பு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடுக்­கப்­பட்­டுள்­ளதா என்­ப­தனை உறு­தி­ப­டுத்த முடி­ய­வில்லை.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்தில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இணை­யு­மாயின் அமைச்சுப் பத­வி­களை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்கு 19 ஆவது திருத்தச் சட்­டத்தில் இட­முள்­ளது. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் பட்­சத்தில் இரண்டு தரப்­பி­ன­ருக்கும் தலா 15 அமைச்சுப் பத­விகள் வீதம் வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் தலா 25 பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது குறித்தும் ஆலோ­சிக்க்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நேற்று முன்­தினம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இதன்­போதும் அடுத்த அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்­பாக விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. எனினும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 113 ஆச­னங்கள் தேவை­யா­க­வுள்­ளது. எனினும் ஐக்­கிய தேசிய கட்சி கூடுதல் ஆச­னங்­களை பெற்­ற­மை­யினால் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக முடியும்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி 95 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் பெற்றன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஆசனத்தை கைப்பற்றின. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.