அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எம்.ஜெமீல் உட்பட பிரமுகர்களும் கலந்து கொண்டனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கென்னும் நிலையமாக செயற்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து ஆதரவாளர்கலால் அழைத்துவரப்பட்டு ஏறாவூர், வந்தாறுமூலை, சந்திவெளி, மாவடிச்சேனை, ஓட்டமாவடி போன்ற இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.