சங்காவை முந்தினார் அஞ்­சலோ மெத்­தியூஸ் !

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் வெளியிட்டுள்ளது.

angelo-mathews
இதன்படி டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர்­களின் தர­வ­ரிசை பட்­டி­யலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் 860 புள்­ளி­க­ளுடன் 5ஆவது இடத்தை பெற்­றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலை­வ­ருமான குமார் சங்­கக்­கார 851 புள்­ளிகள் பெற்று 6ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.

இலங்கை விக்கெட் காப்­பாளர் சந்­திமால் (646 புள்­ளிகள்) 23ஆவது இடத்­திலும், திரி­மான்ன 4 இடங்கள் முன்­னேறி 78ஆவது இடத்­தையும் பிடித்­துள்­ளனர். இந்த பட்­டி­யலில் இங்­கி­லாந்து வீரர் ஜோ ரூட் (917 புள்­ளிகள்) முத­லி­டத்­திலும், தென்னாபிரிக்காவின் டிவில்­லியர்ஸ் (890 புள்­ளிகள்), அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (884 புள்­ளிகள்) முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தில் உள்­ளனர்.

பந்து வீச்­சா­ளர்கள் தர­வ­ரிசையில், தென்­னா­பி­ரிக்­காவின் டேல் ஸ்டெயின் 905 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்­டர்சன், நியூ­ஸி­லாந்தின் டிரென்ட் போல்ட், பாகிஸ்­தானின் யாசிர் ஷா, இலங்­கையின் ரங்­கன ஹேரத், தென்­னா­பி­ரிக்­காவின் பிலாந்தர், அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிட்ஷெல் ஜோன்சன், இந்­தி­யாவின் அஷ்வின், நியூ­ஸி­லாந்தின் டிம் சௌதி ஆகியோர் முறையே 2 முதல் 10-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (759 புள்ளிகள்) 10ஆவது இடத்தில் இருக்கிறார். முரளிவிஜய் 21ஆவது இடத்திலும், ரஹானே 22ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.