சீனாவின் வடபிராந்திய நகரான தியான்ஜினில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது !

china1

சீனாவின் வடபிராந்திய நகரான தியான்ஜினில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன் கிழமை சீனாவின் வட பிராந்திய நகரான தியான்ஜின் நகரில் ஆடைத் தொழிற்சாலையின் இரசாயன பொருட்கள் களஞ்சியப்படுத்தியுள்ள அறையில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதாக இன்று (16) காலை சீனாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

இன்று (16) காலை 9 மணி வரை 112 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தியான்ஜி நகரின் மாநகர சபையின் பொது உறவுகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதில் 24 பேரின் உடல்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று இரவு மாத்திரம் மேலும் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 95 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் 85 தீயணைப்பு வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

சடலங்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இதற்காக மரபு பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த தகவல்களை உடனுக்குடன் வௌியிடவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.