றிஷானா நபிக் ஏன் கொலை செய்யப்பட்டாள் ?

b 3

ஏ.எஸ்.எம்.ஜாவித்
இலங்கையைச் சேர்ந்தவரும் சவூதி அரேபியா றியாத் பங்களாதேஷ் சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் 15வயது மாணவியான ஷெய்னப் இப்திகார் எழுதிய பவர்டி இஸ் நொட் பசிவிவிடி எனும் ஆங்கில நூல் இன்று (15) கொழும்பு கலதாரி ஹோட்டலில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நூலில் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்று மரணதண்டனைக்குள்ளான றிஷானா நபிக் ஏன் கொலை செய்யப்பட்டாள் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி, தொழிலுக்காக மலைநாட்டுப் பெண்கள் படும் துன்பங்கள், இலங்கையின் கல்வி, யுத்தம் மற்றும் சமாதானம், தொழில் சம்பந்தமான விடயங்கள் உள்ளிட்ட தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க பிரதம அதிதியாகவும், விஷேட அதிதியாக புரவலர் ஹாஷிம் உமரும், கௌரவ அதிதியாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் உட்டப பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்hனர்.
நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும், ஏனைய பிரதிகளை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் மற்றும் நூலாய்வினைச் செய்த ஊடகவியலாளர் சிஹார் அனிஸ் உட்பட பிரமுகர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும் படங்களில் காணலாம்.

 இந்த நூhசிரியரின் தாயார் ஒரு வைத்தியர் இவரே சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான றிஷானா நபீக்கிற்கு பல்வேறுபட்ட உதவிகளைச் செய்தும் அவரைக் காப்பற்றவும் அரும்பாடுபட்ட டொக்டர் ஹிபாயா இப்திஹார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

b b2 b4 b 5