வாய்ச் சொல்லில் தான் நாணயமானவன் என்பதை அமைச்சர் றிஷாத் பதீயுத்தீன் நிரூபிப்பாரா ….?

எதிர் வரும் ஒரு தினங்களில் நடக்க விருக்கும் தேர்தலுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்திக் கொண்டு  வருவதை நாம் அறிந்ததே

அவ்வாரு ஒரு கூட்டம் கடந்த சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேற்பாளர்களை  ஆதரித்து சம்மாந்துறை பிரதேசத்தில்  நடை பெற்றிருக்கிறது அதில் பிரதம அதீதியாக தன்னைத் தானே தேசிய தலைவர் என்று சொல்லிக் கொண்டு திரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கலந்து கொண்டுள்ளார் 

அந் நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் றிஷாத் பதீயுதீன் இம்முறை நடை பெற விருக்கும் நாடாளு மன்ற தேர்தலில் தமது கட்சி முஸ்லிம் காங்கிரஸை விட ஒரு ஆசனம் சரி கூடுதலாக பெற வில்லை என்றால் தான் தனது கட்சி பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் அது இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மத்தயில் பெரும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தியுள்ளது

2004ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸினூடாக முதல் முதலி்ல் தனது பாராளு மன்ற கனவை நனவாக்கிய இந்த றிஷாத் தற்போது காங்கிரஸுக்கே சவால் விடுவது என்பது ஒரு பக்கம் நகைச் சுவையாகவும் மற்று மொரு பக்கம் வேடிக்கையாகவும் உள்ளது

ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தலில் பத்து ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் திகழும் என அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறிப்பிட்டு வருவதை நாம் அறிந்ததே

வன்னியில் ஐக்கிய தேசிய கட்சியூடாக களமிறங்கி இருக்கும் றிஷாத் பதீயுத்தீன் அங்கு இருக்கும் தற்போதய சூழ் நிலையில் அவருடைய வெற்றியே கேள்விக் குறியாய் இருக்கின்றது  றிஷாத்தின் கட்சியிலிருந்து விளகிச் சென்று ஐக்கிய தேசிய முன்னனியில் இம்முறை களமிறங்கியிருக்கும்  ஹூனைஸ் பாருக்குக்கும் அங்கு தற்போது அதிகமான செல்வாக்கு இருப்பது நாம் அறிந்ததே அது மட்டு மன்றி ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக களமிறக்கப் பட்டியிருக்கும் நூர்தீன் மசூரின் மகன் நூர்தீன் பர்சானுக்கும் அதிகமான மக்கள்  செல்வாக்கு இருப்பதை கடந்த கால நிகழ்வுகள் பரை சாற்றுகின்றன

இவ்வாறானே ஒரு சூழ் நிலையில் தான் பாராளு மன்றம் செல்வதே கேள்விக் குறியாய் இருக்கும் போது காங்கிரஸில் இருந்து பாய்ந்து சென்ற கயவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் றிஷாத் எவ்வாறு இப்படி கூற முடியும் என்பதே எமது கேள்வி…..?

இவர் உண்மையில் ஆக்ரோசத்தால் வார்த்தையை விட்டு விட்டாரா…? அல்லது அரசியல் அனுபவமின்மையால் இவ்வாறு கூறியுள்ளாரா…? எமக்கு புறிய வில்லை றிஷாத் அவர்கள  எந்த மேடையினால் ஏறினாலும் ரவூப் ஹக்கீமையும்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் சாடி  அரசியல் பேசும் இந்த றிஷாத் தான் சொன்னது போன்று காங்கிரஸை விட அதிக ஆசனம் பெற்று வரலாற்று சாதனை படைப்பாரா…? அல்லது ஆசனமே இல்லாமல் தனக்கு தானே சூட்டிக் கொண்ட தேசிய தலைவர் பதவியை துறந்து தான் வாய்ச் சொல்லில் நாணயமானவன்தான்  என்பதை நிரூப்பிப்பாரா…? இன்ஷா அல்லாஹ் பொருத்திருந்து பார்ப்போம் …

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை