கல்குடா தொகுதியில் வாழும் முஸ்லீம்களின் அரசியல் ரீதியிலான அபிலாசைகளை நிறைவேற்ற தவறுகின்ற வரலாற்றுத்தவறை நாம் செய்துவிட முடியாது

 
அன்வர் நௌஷாத் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதல் முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்ட கல்குடாத் தொகுதி, கடந்த காலங்களில் சகோதரத்துவத்துடனும், கௌரவத்துடனும், இன மத, வேறுபாடுகளின்றிய அரசியலின் அடித்தளமாய் நடந்து வந்திருக்கின்றது. கௌரவ. தேவநாயகம் பா.உ., (கல்குடா) கௌரவ. ஹிஸ்புல்லாஹ் பா.உ., (காத்தான்குடி) கௌரவ. பஷீர் சேகுதாவூத் பா.உ.,(ஏறாவூர்)., நஸீர் அஹமத் மா.ச.உ., முதலமைச்சர் (ஏறாவூர்)., போன்ற மட்டக்களப்பு அரசியல் தலைமைகளின் தேர்தல் வெற்றிகளின் பின்னணியில் கல்குடா முஸ்லீம் பிரதேசங்களின் பங்கு இன்றியமையாததும், மறுக்கமுடியாததுமாகும். இதனை உணர்ந்துள்ள மட்டக்களப்பு முஸ்லீம் சமூகம் பொருத்தமான தருணத்தில் கல்குடாவின் வேட்பாளரான அமைச்சர் அமீரலி அவர்களுக்கு வாக்களிக்கத் தயாராகி இருப்பது உண்மையிலேயே மிக மகிழ்ச்சிக்குரியதாகும்.
இதேவேளை, இம்முறை கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளகியுள்ள நிலையில் முஸ்லீம் கட்சிகளும், வேட்பாளர்களும் வரிந்து கட்டிக் கொண்டு, கல்குடாவின் பிரதிநித்துவத்தையும், முக்கியத்துவத்தையும் இல்லாமல் செய்கின்ற கைங்கரியமானது ஓர் தொகுதியில் இருக்கின்ற மக்களை அப்படியே கபளீகரம் செய்கின்ற ஒரு துரோகமாகவே அச்சமூகம் பார்க்கின்றது. இதற்காக கட்சிகள் என்ற பேதமையோ அல்லது தனிநபர் விமர்சனமோ ஆயுதங்களாக்குவது எதிரிடை அரசியலின் இயலாத்தன்மையாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. இதற்காக கல்குடாவில் உள்ள சில ஏஜென்ட்களும் தமது அரசியல் சுயநலனுக்காக ஒருதலைப்பட்சமாக இயங்குகின்றமை மக்களிடையே அவர்களை பிழையான நோக்கோடு கணிக்கப்படக் காரணமாகியுள்ளது.
 
தமிழ் முஸ்லீம் மக்களின் உண்மையான உறவுப் பாலமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மக்களுக்கான பயணத்தில் மட்டக்களப்பின் அபிவிருத்தி, மாற்றம், மற்றும் உரிமைகளுக்கான நியாமான போராட்டத்தை தனது கையிலெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடையாது. துணிச்சலான சமூகத்தலைமை ஒன்றினூடாக வெற்றியை அனுபவிப்பதற்கான நல்ல தருணம் இப்போது வந்திருக்கின்றது அதனை மட்டக்களப்பு மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், யானைச்சின்னத்தில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற எமது அமைச்சர் அமீர் அலி அவர்கள் நமது மக்களுக்கு அத்தகைய தலைமையை வழங்கத் தகுதியானவர். அவரை வெற்றியடைச்செய்வதன் மூலம் இதனை சாத்தியப் படுத்தி நமது எதிர்காலத்தை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.