எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை த‌மிழ் முஸ்லிம் உறவை உடைத்த‌மைக்கு ச‌ம‌மான‌தாகும் !

 

mubarak mmFotor_Collage_Fotor

 

எஸ்.அஷ்ரப்கான்

க‌ல்முனை ச‌ந்தாங்கேனியில் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பெய‌ர் ப‌ல‌கையை த‌ன்னிச்சைப்படி உடைத்த‌ ஹென்றிம‌ஹேந்திர‌னின் செய‌லை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து. 

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ள‌தாவ‌து, 

க‌ல்முனை ச‌ந்தான்கேனி மைதான‌த்துக்கு எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் பொருத்த‌மான‌தாகும். க‌ல்முனையின் த‌ந்தை என‌ அழைக்க‌ப்ப‌டும் எம் எஸ் காரிய‌ப்ப‌ரின் பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை த‌மிழ்முஸ்லிம் உறவை உடைத்த‌மைக்கு ச‌ம‌மான‌தாகும். இப்பெய‌ர் சூட்ட‌லை சில‌ர் க‌ல்முனை மாந‌க‌ர‌ மேய‌ர்நிசாம் காரிய‌ப்ப‌ரின் குடும்ப‌ பெய‌ருட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தி அத‌னை விம‌ர்சிப்ப‌து அறியாமைக்கால‌ செய‌ற்பாடாகும். 

மேற்ப‌டி பெய‌ர் ப‌ல‌கையை த‌ன்னிஷ்ட‌ப்ப‌டி ச‌ட்ட‌த்தை கையில் எடுத்துக்கொண்டு உடைத்த‌மை பொது ப‌ல‌ சேனாவின் ந‌ட‌வ‌டிக்கையை நினைவூட்டுகிற‌து.  அதே போல் எதிர் கால‌த்தில் க‌ல்முனைத்தொகுதிக்குபாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இல்லாது போனால் முழு க‌ல்முனை ப‌ஸாரும் இன‌வாதிக‌ளால் உடைக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்ற‌ அச்ச‌த்தை ந‌ம‌க்கு ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

இந்த‌ இட‌த்தில் க‌ல்முனைத்தொகுதிக்குள் உள்ள‌ அனைத்து ஊர் ம‌க்க‌ளும், அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளும் த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌ த‌லை ந‌க‌ரான‌ க‌ல்முனையை காக்கும் வ‌கையில் ஒன்று ப‌ட்டு ச‌கோத‌ர‌ர்ஹ‌ரீசிக்கு வாக்க‌ளிப்ப‌து ச‌மூக‌ க‌ட‌மை என்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ம‌க்கு காட்டுகிற‌து. 

ஆக‌வே மேற்படி பெய‌ர் ப‌ல‌கையை உடைத்த‌மை அப்ப‌ட்ட‌மான‌ இ‌ன‌ வாத‌ செய‌ல் என்ப‌துட‌ன் இதில் ஈடுப‌ட்டோரை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து என‌ முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ளார். 

11017365_1008243755893798_1511988971918491284_n 11813385_1008243829227124_2001132723561039886_n