பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியா பயணித்த கார் டாக்கா நகரிலுள்ள சந்தையொன்றில் திங்கட்கிழமை நின்ற போது, அந்தக் கார் மீது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக அவரது செயலாளர் தெரிவித்தார். |
அவரது காரை பெருந்தொகையான மக்கள் தடிகள் மற்றும் கற்கள் சகிதம் முற்றுகையிட்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள மேயர் பதவிக்கான தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவருக்காக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவே காலிதா ஸியா சனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பயணம் செய்த கார் மீது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டுள்ளன.
அந்தக் கார் குண்டு துளைக்காத கார் என்பதால் காலிதா ஸியா எதுவித பாதிப்புமின்றி உயிர்தப்பியதாக அவரது தனிப்பட்ட செயலாளர் ஷிமுல் பிஸ்வாஸ் தெரிவித்தார்.