கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை தலைவர் லயனல் மெஸ்ஸி எப்போதும் அமைதி போக்கையே கடைப்பிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள்.
தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்ஸி சளைக்காதவர் என்றாலும், சில நேரங்களில் மெஸ்ஸிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீஸன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது.
போட்டியின் போது மெஸ்ஸிக்கும் ரோமா வீரர் மெபான்யான்காவுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மெஸ்ஸி எதிரணி வீரரின் கழுத்தை நெரித்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.