ஆஷஸ் : ஆஸ்திரேலியா 60 ரன்னில் சுருண்டது , பிராட் 15 ஓட்டங்கள் கொடுத்து 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார் .

219477.3

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார். காலையில் மழை பெய்ததால் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதால் குக் இந்த முடிவை எடுத்தார்.

குக் நினைத்த மாதிரியே ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். எந்தவொரு பேட்ஸ்மேனாலும் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.

ரோஜர்ஸ் (0), வார்னர் (0), சுமித் (6), ஷேன் மார்ஷ் (0), கிளார்க் (10), வோக்ஸ் 91), நெவில் (2), ஜான்சன் (13), ஸ்டார்க் (1), லயோன் (9) சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 60 ரன்னில் சுருண்டது.  ஹசில்வுட் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்னைவிட எக்ஸ்ட்ரா (உதிரி) ரன்கள்தான் அதிகம். உதிரியாக 14 ரன்கள் கிடைத்தது. அதன்பின் ஜான்சன் (13), கிளார்க் (10) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். ஸ்டூவர்ட் பிராட் 15 ஓட்டங்கள் கொடுத்து 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார் .

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 273 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்துள்ளது . இவ் அணி சார்பாக ஜோய் ரூட்  ஆட்டமிழக்காது  124 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார் .

219479.3 219501.3